பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ຂ_Grr໖ 10-4-85 73 சென்றேன். பிற்பகல் உணவு ஒரு கடையில் பிஸ்கட், பழம், உருளை சிப்ஸ் இவற்றோடு முடிந்தது. முன்நாள் பதிவு செய்திருந்தபடி, சுற்றுலா பஸ்'சில் பிற்பகல் 2.30முதல் 6 வரை பல இடங்களுக்குச் சென்றேன். ஆங்கிலத்தில் ஒரு பெண்மணி (பஸ்ஸில் அதற்கென வந்தவர் - Guide) எல்லா இடங்களைப் பற்றியும் நன்கு விளக்கினார். இரு பெரிய மாதா கோயில்களின் உள்ளே அழைத்துச் செல்லப் பெற்றோம். அவற்றின் அமைப்பு நம் தஞ்சைப் பெரிய கோவில் போலக் காட்சி தந்தது. எங்கும் பெரிய சிலைகள் . பலவகையான வண்ணங்கள் தீட்டப்பெற்ற மேல் வட்டங் க்ள், சலவைக்கல்லால் ஆகிய தரைகள்: மோசேக்'(Mosaic) என்று சொல்லப்படும் அழகிய தரைகள். இவற்றுள் பல கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்குரியன என்று கூறினர். அந்தக்.காலந்தொட்டு, கிறித்தவ சமய வளர்ச்சிக்குப் பாடு பட்ட பல தொண்டர்கள் சிலைகள் அவை என்றனர். ஒரு கோயிலுக்கு அமைந்த பெரியவாயிலில் மிகப் பழங்காலத்திய இரும்புக் கதவுகள் பொருத்தப்பெற்றிருந்தன. அவை 1800 ஆண்டுகளுக்கு முன்செய்யப்பெற்றவை என்றனர். கோயில் அமைப்பு - முகப்பு, பிறநிலைகள், நம்பிற்காலச் சோழர்தம் பணிகளை நினைவூட்டின. அதற்கேற்றாற்போல், வழி காட்ட வந்தவர், அந்தச் சில்ைகளையும் பிறவற்றையும் செய்ய எகிப்து, கிரிஸ் போன்ற பிற கீழைநாட்டுக் கலைஞர் கள் வரவழைக்கப்பெற்றனர் என்றனர். கீழை நாடாகிய நம் தமிழகத்தோடு கிரேக்க, உரோம, எகிப்திய நாட்டவராகிய யவனர் கொண்ட தொடர்பினை நம் இலக்கியங்கள் காட்டுகின்றனவே. எனவே இப் பெரும் பணிகளில் நம் நாட்டவர் பங்கும் நிச்சயம் இருந்திருக்கும் என முடிவு கொண்டேன். வேறுபல பெருங் கட்டிடங்கள், சதுக்கங்கள் முதலியன கண்டுகொண்டே பழைய ரோம் என்று கூறப் பெறும் அக் காலத்திய அரசர்வாழ் மாளிகை இருந்த எல்லையில் புகுந்தோம். அந்தப் பழைய நகர எல்லை சுமார் 30கி.மீ. சுற்றளவை உடையது என்றனர். அதை சுற்றிப் பல சுடுமண் சுவர்கள் 30,40மீ. உயரம் நிற்க, பல பகுதிகள்