பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் னேன். எத்தனையோ வேற்று நாட்டவர் படையெடுப்பு களுக்கு இடையில் மாற்றார் ஆட்சிகளுக்கு இடையே தமிழகம் மூவாயிரம் ஆண்டுகளாகத் தன் தொன்மை மொழி யின் இயற்கை நலத்தையும், உயரிய கலை நலம் காட்டும் கோபுரங்களையும், மாமல்லபுரம் போன்ற சிற்பக் களஞ்சியங் களையும், ஆனைமாமலை ஆதியாய இடங்களில் சிற்றன வாசல், திருமய்யம் போன்ற இடங்களில் அமைந்த சமயச் சின்னங்கள் - வண்ணங்கள், காஞ்சி பல்லவமேடு போன்ற் வற்றையும் காத்து வருகின்றமை போன்று, உரோமர்களும் எத்தனையோ மாற்றார் போர்களுக்கும் ஆட்சிகளுக்கும் இடையிலும் தம் பழைய சின்னங்களையும் இடிந்த சுவர், பாழி, அகழி முதலியவற்றையும் பாதுகாத்து வருகின்ற சிறப்பினை எண்ணினேன். எனினும் இரண்டிடத்தும் இன்னும் தொல்பொருள் காப்புக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என உள்ளம் எண்ணிற்று. இவ்வாறு பலவகையில் எண்ணிய நான் அக்காலத்திய தொல்காப்பியர் காலத்தியமுப்பெருவேந்தர்கள் ஆட்சியினை யும் அன்றைய தமிழர் இந்த நாட்டொடு கொண்ட தொடர் பினையும் எண்ணிக்கொண்டே என்னை மூவாயிரம் ஆண்டு களுக்கு முன் பிறந்த ஒருவனாக்கிக்கொண்டு . அந்த வரலாற்று வாழ்வுக்கிடையில் வாழ்வதாக எண்ணிக் கொண்டே - என்னை மறந்த நிலையில் அப்படியே உறங்கி விட்டேன். காலை முறைப்படி 5 மணிக்கு எழுந்தேன்.