பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலண்டன் 11-4-1985 காலை எழுந்து கடன்களை முடித்துக்கொண்டு, நாட் குறிப்பினை எழுதி, காலை உணவு கொண்டு லண்டனுக்குப் புறப்பட்த் தயாரானேன். புறப்படுமுன் நான் தங்கிய விடுதி 'யில் உள்ள் தாயர் நடத்தும் குழந்தைகள் பள்ளி ஒன்றினைக் கண்டேன். சில விளையாட்டுக் கருவிகள் இருந்தன . நூல்கள் கிடையா .ஆடியும் பாடியும் வேடிக்கையாகக் கதை சொல்லியும் பொழுது கழியுமாம். நல்ல தூய உடை: வேடிக்கையான பொழுதுபோக்கு; தூய்மையான சுவர்கள் - தரை சுற்றுச் சார்வு. 9 மணிக்குப் புறப்பட்டு,"போப்பாண்டவர் வாயிலுக்கு வந்தேன். திரு. குழந்தைராஜும் இங்கே வானொலியில் பணியாற்றும் அன்பர் ராஜனும் வந்தனர். நான் வந்தது. அவருக்கு இன்று காலைதான் தெரிந்ததாம். முன்னே தெரிந்திருந்தால் வானொலியில் பேட்டி அமைத்திருக்கலாம் என்றனர். பின் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். குழந்தைராஜ் உண்மையிலேயே குழந்தைமணம் உடையவர். என்னுடைய பாரம் தாங்கும் பெட்டியை அவரே எல்லா இடங்களுக்கும் சுமந்து வந்ததோடு, கடைசிவரை வந்து பஸ்ஸில் ஏற்றிவிட்டார். அவரைப் பிரியும்போது நான் கண்கலங்கினேன். இரண்டே நாள் பழகியபோதிலும் அவர் என் உள்ளத்தில் நிறைந்துவிட்டார். எனவே உள்ளப் பிரியும் நிலையில் நின்றேன். பஸ் புறப்பட்டது.