பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் 12 மணிக்கு விமான நிலையத்துக்கு வந்து 1-15க்குப் புறப்படவேண்டிய விமானத்துக்காகக் (British Air ways) காத்திருந்தேன். இங்கெல்லாம் போலீஸ், சுங்கம் முதலியன சாதாரணமே அனைவரையும் பெருந்தன்மையாக நடத்து கின்றனர். விமானநிலையம் பெரியது. ஐரோப்பிய நாடு களுக்கும் ஆப்பிரிக்கா ஆசிய நாடுகளுக்கும் பாலமாக இந்த உரோம் . இத்தாலியின் தலைந்கரம் இருந்தமையின் பல நாட்டு விமானங்களும் இங்கே இருந்தன. ஜப்பான் நாடு தொடங்கி அமெரிக்க நாடுவரை - ஆப்பிரிக்காவின் பல நாடுகள் உட்பட பல நாடுகளின் விமானங்கள் இருந்தன. அப்படியே அவை விரைந்து செயல்பட்டன. நான் இருந்த சுமார் ஒரு மணி நேரத்தில் 20 விமானங்கள் கிளம்பிச் சென்றன என்றால் அதன் எல்லை தெரிகிறதல்லவவா உள்நாட்டு வெளிவிநாட்டு விமானநிலையங்கள் தனித்தனி யாக உள்ளன. ஒரு பெரிய ஜப்பான் விமானம் நின்றிருந் தது. இன்னும் மாலைப் பொழுதிலும் இரவிலும் அதிகமான விமானங்கள் போக்குவரத்து உண்டு என்றனர். நான் வியந்தேன். சரியாக 1-15க்கு விமானம் புறப்பட்டது. மிக உயர்ந்து கடலை ஒட்டியே சென்று உயரிய ஆல்ப் மலையைக் கடக்கும்போது 16,000 அடிக்கு மேலாக இருக்கும். கீழே பனி மூடிய மலைகள் நன்கு காட்சி அளித்தன. மேகங்கள் எங்கோ கீழே ஓடின. குளிர்ந்த பானம் அளித்தனர். உணவு அளிக்குமுன் நான் அசைவ உணவு வேண்டாம் என்று சொல்லியும், பயணச்சீட்டில் அது பற்றிய குறிப்பு இருந்தும், விமானப் பணிப்பெண் மீன் கலந்த உணவினைப் படைத் தாள். நான் பக்கத்தில் இருந்தவரைக் கேட்டேன். அவர் அரெபியாவில் செயலாற்றும் ஆங்கிலேயர். அவர் உடனே பணிப்பெண்ணை அழைத்து அரிசி சாப்பாடு கொண்டுவரச் சொன்னார். அரிசி உணவு அங்கே உண்டா என வியந்த வேளையில் நல்ல அரிசிச் சோறு, பச்சைப்பட்டாணி முதலிய கறிகள் கலந்து பக்குவப்படுத்தப்பட்ட வகையில் கொண்டு