பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ஏழு நாடுக்ளில் எழுபது நாட்கள் கிரீம், தயிர் பச்சடி ஆகிய நம் நாட்டு உணவை நன்கு உண்டேன். உணவுக்குப்பின் கூட்டத்தலைவர் இங்கே விடுதி யிலேயே தங்கிப் படிக்க வந்துள்ள வெளிநாட்டு மாணவர் சிலர் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி, செம்மையாக வாழவேண்டிய வகையிைனயும் இந்த மன்றம் எப்படி எப்படி வளர்ந்தது என்பதையும் வெளிநாட்டவருக்கு. சிறப்பாக இந்தியருக்கு எவ்வெவ்வாறு உதவுகின்றது என்பதையும் விளக்கினார். 8.30க்குக் கூட்டம் முடிந்தது. . நான் வெளியே வ்ந்ததும் இரு அன்பர்கள் (திருவாளர் கள் வீர சிங்கம், தேவதாசு) என்னைத் தேடி வந்தனர். பேசினர்; அறைக்குச் சென்றோம். திரு. தமிழ்மணி அரங்கமுருகையன் அவர்கள் விமான நிலையத்துக்குச் சற்றே தாழ்த்துச் சென்றதாகவும் (நான் புறப்பட்டு 3 நிமிடங்களுக் குள்) அங்கே அந்த யாழ்ப்பாண நண்பரைக்கண்டதாகவும் i sjøuri Grcir "YMCA” சென்றதைச் சொல்ல, அதன் வழியே பின் தொலைபேசியில் உறுதிசெய்துகொண்டு, அவர் அனுப்ப இவர்கள் இருவரும் இங்கே வந்ததாகவும் அவரும் வந்து கொண்டிருப்பதாகவும் கூறினர். அவரும் அதற்குள் வந்து விட்டார். அனைவரும் அறையில் அமர்ந்து பலப்பல பொருள்களைப் பற்றிப் பேசினோம். - . நான் நடத்தும் பள்ளியினைப் பற்றியும் அதன் முறை முதலியனபற்றியும் கேட்டறிந்தனர். அவர்கள் பிள்ளை களுக்கு இங்கே தமிழ் பயிலவாய்ப்பே இல்லை எனவும் தமிழ் நாட்டு அரசாங்கம் எவ்வளவு வேண்டியும் வெளிநாட்டுத் தமிழர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை எனவும் வருந்திக் கூறினர். அமைச்சர்கள் நெடுஞ்செழியன், இராசாராம் போன்றவர்களும் பிற தலைவர்களும் வந்தபோதும் பல குறைகளை முறையிட்டும், ஆவன செய்வதாகச் சொல்லிச் சென்றவர்கள், பல நினைவூட்டுக் கடிதம் எழுதியும் ஒன்றும் செய்யவில்லை. என்றனர். தமிழ்நாட்டுப் பாடநூல்கள் உயர்ந்த தரமுள்ளனவாக உள்ளமையின் இன்னும் எளிய வகையில் பயிலப் பாடநூல்கள் வேண்டும் என்று கேட்டும்