பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலண்டன் 11-4-86 .6: அரசாங்கமோ பிறரோ ஒன்றும் செய்யவில்லை என்றனர். நான் தமிழ்ப் பல்கலைக்கழகத்தோடு தொடர்பு கொண். டுள்ளமையின் அங்காவது செய்யமுடியுமா என்றனர். தமிழ்ப்பல்கலைக்கழகச் சார்பில் சென்ற ஆண்டு இங்கே வந்த ஒருவர் ஏதேதோ செய்வதாகச் சொல்லிச் சென்று எழுதிய கடிதங்களுக்குப் பதில் கூடப்போடவில்லை என வருந்தினர். தற்போது புலவர் நன்னர் வழியே ஏதோ ஒரு நூலைத் தயார் செய்வதாகவும். அதன் செலவு முழுவதையும் திராவிட கழகம் ஏற்றுக்கொண்டு விரைவில் அனுப்ப இருப்ப தாகவும் கூறினர். இங்கே தமிழுக்குத் தனியாகப் பள்ளி, இல்லையாதலால், வாரத்தில் ஒரு நாள் சனிக்கிழமையில் தமிழைக் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். அதற் கும் முறையான ஆங்கிலப்பள்ளியில் இடம் பெற, பெரிதும் இடர்ப்பட்டு முயன்று பெற்றார்களாம். தற்போது 150 பிள்ளைகள் சேர்ந்திருந்தாலும் மிகக்குறையாகவே சனிக் கிழமை தொறும் பிள்ளைகள் வருவதாகச் சொன்னார்கள். இது போலவே இலண்டனில் பிற படுதிகளிலும் இந்நாட்டில் பிறபகுதிகளிலும் பள்ளி தொடங்க விருப்பம் உண்டு என்றும் தமிழ்நாட்டு அாசாங்கமோ தமிழ்ப் பல்கலைக்கழகமோ முயன்று,இத்தரத்துக்கு ஏற்பப் பாடநூல்களைத் தயாரித்துக் கொடுத்தால் பயன்விளையும் என்றும் கூறினர். பொதுவாக, தமிழக அரசு வெளிநாட்டுத் தமிழர்களை - தமிழ்மொழி பயிலும் வகையில் ஆற்றுப்படுத்த ஒன்றும் செய்யவில்ல்ை என வருந்தினர். திரு. இராசாராம் அவர்கள் முெளஷியஸ், பிஜி முதலிய தீவுகளுக்குச்சென்று அங்குள்ள தமிழர் நிலை அறிந்து, அவர்களுக்கெல்லாம் ஆயிரக்கணக்கில் நூல்கள் அனுப்பியுள்ளதைச் சுட்டினேன். எனினும் அந்த வகை உதவி உண்மையில் பயன்படாது என்றும் அந்நூல்கள் அலமாரி களில் தூங்கும் என்று கூறி, தமிழ்ப் பிள்ளைகள் எளிதாகப் பயிலும் வகையில் - படம் காட்டி - எழுத்தினை எண்ணி எண்ணிக்கூட்டி வண்ணப்படச் சோலை அமைத்து - பிள்ளை கள் உளங்கொள்ளும் வகையில் நல்லத்தமிழ்ச் சொற்களை மெல்ல மெல்லப் பயிலும் வகையில் பாடநூல்களை வெளி ஏ.-6 -