பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் காலை 9.30க்கு இலண்டன் நகரைச் சுற்றிப் பார்ப்பதற். குரிய சீட்டினை வாங்கிக் கொண்டு, அதற்கென அமைந்த இரட்டைமாடி வண்டியில் மேலே சென்று அமர்ந்தேன். சரி யாகப் 10 மணிக்குப் புறப்பட்டு 12 மணி அளவில் திரும்பி வந்தது. எங்கும் இறங்கவில்லை யாயினும் (உரோம் நகரில் சிலவிடங்களில் இறங்கி உள்ளே சென்று கண்டத்தைக் குறித் தேன்) எல்லா இடங்களையும் வண்டியிலிருந்தே காண வாய்ப்பு இருந்தது. வழிகாட்டியாக இருந்த பெண் எல்லா வற்றையும் நன்கு விளக்கினார். பல குடியிருப்புக்களைக். கண்டோம். இங்கே நம் நாட்டைப் போன்று மக்கள் அதிக மாக நடக்கின்றனர். ஒரு வேண்ளக் கார்'கள் இங்கே எண்ணிக்கையில் குறைவு போலும். பாரிஸ், ரோம் முதலிய இடங்களைக் காட்டிலும் நடைபாதையைப் பயன்படுத்துவர் இங்கே அதிகம். விக்டோரியா இரெயிலடியில் இருந்த அரை மணி நேரத்தில் கடலென மக்கள் வெள்ளம் அலை புரள் வதைப் போல், அசைந்து ஒடிக்கொண்டிருப்பதைக் - கண்டேன். உந்து வண்டியில் மேல் தளத்தில் இருந்தமை யால் மக்கள் நடமாட்டம் மிக நன்றாகத் தெரிந்தது. அப்படியே சுற்றி வந்த பல இடங்களிலும் அதிக மக்கள் நடந்தே சென்றனர். ஒரு வேளை வெளிநாட்டு மக்கள் அதிக மாக இங்கே உள்ளமையின் இந்த நிலையோ என எண்ணி னேன். வண்டி சரியாகப் பத்து மணிக்குப் ப்யணம் தொடங் கியது. 15ம் நூற்றாண்டு தொடங்கி, அவ்வப்போது ஒவ்வொரு நூற்றண்டிலும் எழுந்த கட்டடங்களையும், கோயில்களை பும், அலுவலகங்களையும், வேற்றுநாட்டார் அலுவலகங் களையும் அவற்றைச்சுற்றியுள்ள மாளிகைகளையும் விள்க்கிக் காட்டினர். உலகிலேயே மிகப் பெரிய பூங்காவிடைச் சென்று-அதை சார்ந்த ச்ர்ன்லகிள்ல் நெடுந்துாரம் சென்று. காட்டினர். உலகிலேயே பெரியது என்றனர். அப்படியே தெம்ஸ்நதி ஓரமாக இருபக்கத்திலும் சென்று அங்கே நிற்கும் விசைப்படகுகள், சிறுகப்பல்கள் ஆகியவற்றைக் காட்டின்ர். நம் பாம்பன் பாலத்தைய போன்று, சில இடங்களில் உள்ள