பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலண்டன் 12-4:85 85 பாலங்கள் தொங்கு பாலங்களாகி, கப்பல் செல்லும்போது நிமிர்ந்து வழிவிட்டும், பிறவேளைகளில் அம்ைந்து தரைப் போக்குவரத்துக்குத் துண்ையாகவும் இருந்தன. ஒன்றின் அருகில் சென்று நிறுத்தி அதன் தன்மையை விளக்கினார்கள். படகு வீடுகளும் இருந்தன. படகில் இலண்டனைக் காணும். வசதியும் உண்டு. ஆறு அகலமின்றேனும் ஆழ்மாக உள்ளது போலும். தண்ணீர் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. வழியிடை ஆங்காங்கே எண்ணற்ற சிலைகள் இருந்தன. சில விடங்களில் கழுகுச் சிலைக்ள் இடம் பெற்றன. (உரோம் நகரிலும் அத்தகையை சிலைகள் இருப்பதைக் கண்டேன்) இரண்டினையும் தொடர்பு படுத்த முயன்றேன். தக்க சான்று பெற முடியவில்லை. எல்லாவிடங்களிலும் இடையில் சிறு பூங்கா, சுற்றிலும் குடியிருப்புப் பகுதிகள் - பெருபாலும் 5 மாடிகள் - இருந்தன. இலண்டனில் புதிய அமைப்புக்கள் இந்த வகையில் அமைய், இதே நிலையில் தில்லி காரோல்பாக்' எல்லையில் இருப்பதைகண்ட நான், இந்த லண்டன் அமைப்பை ஒட்டியே அதையும் அமைத்தார்களோ என எண் ணினேன். – ". * - - 1960 முதல் கட்டிய பல கட்டடங்கள், கிழக்கியக் கம்பெனிக்கு உரிய இடம், பக்கிங்காம்,அரண்மனை, பார்லிய மெண்ட் கூடம், தலைமை அமைச்சருக்கு உரிய 10 டவுனிங் தெரு, உயர்நீதி மன்றம், பிற மன்றங்கள், லாட்ஸ் சாலை கூடும் இடம், நகரத் தந்தையின் இடம் (Lord Mayor of London) அவற்றைச் சேர்ந்த அலுவலகங்கள், பிறநாட்டுத் தூதுவரகங்கள் (சில, ஆங்கிலேயர், அமெரிக்கருக்கு இனாமாக வும் ஆண்டுக்கு ஒரு பவுண்டு எனப் பேருக்கு வாடகை பெறும் வகையிலும் தரப்பெற்றுள்ளன). இங்கிருந்து வெளிவரும் Daity Telegraph, London Times. Sunday Editions gou நாளிதழ்களும் பிறவும் வெளிவரும் கட்டடங்கள் அனைத்தை யும் கண்டேன். ஒருவிடத்தில் பெரிய படுத்த நிலை யிலே உள்ள சிங்கங்கள் இருபுறமும் இருக்கும் சிலைகள் இருந் தன. அவற்றின் முகம்.மனிதமுகமாக இருந்தது, இலண்டன்