பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் நுழைவாயில் என்ற பகுதியினையும் கண்டேன். இலண்டன் கோபுரமும் கண்டேன். பலவிடங்களில் மிக உயரிய கோபுரங் களும் அவற்றின் மேல் பலப்பல சின்னங்களும் இருப்பதைக் கண்டேன். இலண்டனில் உண்டான பெருந் தீ விபத்தில், பாழாகிச் செம்மையாக்கப் பெற்ற கட்டட்ய்களையும் காட்டி னர். அப்படியே கார்கள் செய்யும் தொழிற்சாலைகள். காட்டப்பெற்றன. பழங்காலத்திய செல்வர்தம் மாளிகை வங்கிகள். காசோலைகள்மாற்றும் இடம் (Exchange office) பல பெரும் வியாபார நிலையங்கள் கண்டேன். அப்படியே சர்ச்சில், ஆப்பிரகாம்லிங்கன் போன்றோர் தம் சிலைகளைத் தெருமுனைகளில் கண்டேன். பெரிய நூல்நிலையம் பல்கலைக் கழகக் கட்டிடம், வெஸ்டுமினிஸ்டர் ஆபே எனும் இடம் ஆகியவற்றையும் காட்டினர். அவற்றுள் சிலவற்றை நான் நாளை உள் சென்று காணவேண்டும். வில்லியம் ஷேக்ஸ்பியர் போன்றார் வாழ்ந்த இடம், பிற அறிஞர் அரசியலாளர் வாழ்ந்த இடங்கள் ஆகியவற்றையும் கண்டேன். இந்தியத் தொடர்புடைய சில் கட்டடங்கள் கண்டேன். . . . - இங்கே பல இட்ங்களில் வாடகைக்கு விடப்படும் என்ற பலகைகளைக் கண்டேன். அவை பெரும்பாலும் வாணிபத் துக்கும் வங்கிகள் போன்றவை இருப்பதற்கும் ஏற்ற இட மாக இருந்தன. எனவே இவ்வளவு நெருக்கடியிலும், பல இடங்கள் காலியாக உள்ளமை, ஒருவேளை இங்கே வாணிப வளம் குறைந்து விட்டதோ என்ற உணர்வை உண்டாக் கிற்று. அப்படியே சிலவிடங்கள் விற்பனைக்கு என்ற விளம்பரங்களைக் கொண்டிருந்தன. இவற்றை நோக்கும் போது இலண்டனில் செல்வ வளம் ஓரளவு சரிந்திருக்குமோ என்றும் நினைக்கத் தோன்றுகின்றது. உலக வரலாற்றில் எத்தனையோ வகையில் பங்கு கொண்ட் இடங்களைச் சுற்றிப்பார்க்கும்போது, என் எண்ணம் மிகப் பின் நெடுந் தூரம் சென்றது. இந்த இலண்டனில் எத்தனையோ மாநாடு கள் சமாதானக் கூட்டங்கள் - போர்க்கால முழக்கங்கள்