பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் ஆண்டு, தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகம் வெளிநாட்டுத் தமிழர்களுக்காக நடத்திய வகுப்பில் பயிலுவதற்கென வந்து ஒரு மாதம் தங்கி இருந்தார். நான் அப்போது அங்கே காண வில்லையாயினும், இங்கே அவர் வந்த பின் எல்லாத் தகவல் களையும் சொன்னார். இவரும் வெளிநாட்டில் உள்ள தமிழர் அவல நில்ையினையும் சிறப்பாகச் சைவ சமயத்தவர் உள்ள தன்மையினையும் விளக்கினார். இலண்டனில் 30,000 சைவத் தமிழர் உள்ளனர் என்றும் சில கோயில்களும் உள்ளன எள்றும் அவற்றைக்காணவோ, சிறப்புச் செய்யவேர் தமிழ் நாட்டு மடாதிபதிகள் யாரும் முன் வரவில்லை என்றும் கூறி வருத்தமுற்றார். சைவ சித்தாந்தத்தில் ஆழ்ந்த பற்றுள்ளவர்; அது பற்றிச் சில நூல்களும் எழுதியுள்ளார். எங்கள் பேச்சு பல கோணங்களில் சென்றது. நம் சைவ சமயம் எவ்வெவ்வாறு வளர்ந்தது என்பதையெல்லாம் சுட்டி, இன்று உலகெங்கணும் பரவி இருப்பினும் தமிழ்நாட்டு மடாதிபதிகள் இதுபற்றிக் கவல்ையுறாது இருப்பதைப் பற்றிக்கூறி, அவர்களுக்கும் தாம் பலமுறை கடிதங்கள் எழுதி யும் பயனில்லை என நைந்த்ார். பிற சமயத்தவர் - சிறப் பாகக் கிறித்தவர்களுக்கு குருமார்கள் வழிகாட்டுவதைப் போன்று, நம் சமயத்ததருக்கு - சிறப்பாகச் சைவ சமயச் சித்தாந்திகளுக்கு யாரும் வழிகாட்ட இல்லையே. என வருந்தினார். வேதாந்திகளுக்காயினும் சில தலைவர் கள் உள்ளமை காட்டினார். தாம் தமிழ்நாட்டுக்குப் பல முறை வந்துள்ளதாகவும் பல கோயில்களைக் கண்டதாக வும் கூறின்ார். தற்போதைய தமிழ்நாட்டு அரசாங்கம் இத்துறையில் செய்துவரும் சில சீர்த்திருத்தங்களைப் பாராட்டிப் பேசினார். இவர் உள்ளத்தின் தன்மை உணர்ந்த நான், பல கருத்துளைக் கூறித் தெளிய வைத்தேன். ஏழு மணிக்கு உணவு:வேளை. எனவே என்னுடனேயே அந்த உணவு அறைக்கு வந்து'இருந்தார். கடைசியில் பழக் கலவை, காப்பி மட்டும் உடன் உண்டார். இன்றும் நல்ல அரிசி உணவு, மோர்குழம்பு, நல்ல பதார்த்தங்கள் இருந்தன.