பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28


தியானத்தில் நின்று என்னைப் பார்தெரிவேன்
முனிவருக்கும் தேவருக்கும் மூலம் நானே
திரண்ட பொருள் அனைத்தும் கண்ணன்
தெரிகின்ற தோற்றமெல்லாம் கண்ணன்
சிறந்ததில் சிறந்ததும் நானே ஆவேன்
தெய்வங்களில் சங்கரன் தேவிகளில் பராசக்தி
தேவர்களில் இந்திரன் முனிவர்களில் நாரதன்
வேதங்களில் சாமம் நாதங்களில் பிரணவம்
மன்னர்களில் ஜனகன் மந்திரியில் விதுரன்
செல்வர்களில் குபேரன் வள்ளல்களில் கர்ணன்
வீரர்களில் விஜயன் வில்லிலே காண்டீபம்
சத்தியத்தில் அரிச்சந்திரன் சாத்திரத்தில் சகதேவன்
சேவையில் அனுமான் சேனாபதிகளில் கந்தன்
கவியினிலே வால்மீகி புவியினிலே தமிழ்நிலம்
மலைகளிலே இமயம் நதிகளிலே கங்கை
தலங்களிலே திருமலை தளங்களிலே வில்வம்
மரங்களிலே அரசு மலர்களிலே மல்லிகை
காலங்களில் இளவேனில் மாதங்களில் மார்கழி
ஏழைகளில் குசேலன் எஜமானரில் துரியோதனன்
துயரினிலே குந்தி சூழ்ச்சியிலே சகுனி
மருந்தினிலே துளசி மந்திரத்தில் நாராயணாய
என்று தனக்கினிய அம்சங்களைச் சொன்னான்.

காண்டீபன்

"பெரியவனே மாயவனே பேருலகைப் படைத்தவனே
பெருமைக்குரிய அனைத்தும் நீ என்ற பின்னே
துயருக்கு என் அன்னையைச் சொன்னதென்ன?"