பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

கம்பர் மனம் சிரித்தார் காளியை நினைத்தார்
முடிசூட்டு நாளில் மூலராமன் வனம்போனான்
அரங்கேற்ற நாளில் அவன் கதைக்குத் தடையோ
திருமாலின் பெருமைக்குத் திரையாக மகன்விழுந்தான்
விதிவகுத்த சதியோ இதுவென்று வெந்தார்
எதிர்ப்புகள் அனைத்தையும் நெருப்பாக எரித்தவர்
மகனின் மறுப்புரைக்கு மறுப்புரைக்க வாயிழந்தார்
ஏட்டுச் சுவடிகளை எடுத்துச் சுருட்டினார்
தடுத்து நிறுத்த சரராமன் தத்தளித்தான்
பகை முகத்தில் வாளால் பேசும்வலிய சோழன்
இலக்கியச் சந்தையில் இளைத்து நின்றான்
கம்பர் சிவிகைவிருது சேவகரை மறுத்தார்
சுவடிக் கட்டைச் சுமந்தபடி நடந்தார்
சோழனும் அவரை ஏழடி தொடர்ந்தான்
வெண்ணைச் சடையனும் உடன் பயணமானான்

கம்பர்
வள்ளலே நில்லுங்கள் வருவான் கம்பன்
என் எழுத்தாணி முனையில் எழுத்தாக பழுத்த
அழுந்தூர் காளி ஒருநாளும் தோற்கமாட்டாள்
அன்றொரு நாள் சாட்சிக்கு வந்த ஆயமகள்
மாய்ந்தாளோ மருளாதீர் வருகின்றேன் வருகின்றேன்,

மகனே அம்பிகாபதி என் மனவருத்த மெல்லாம்