பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

நீல விழி மலர்கள் காவியம் பாடின
நெஞ்சத் திரையில் அவளழகை நிறுத்தினான்
செந்தமிழ் வண்ணச் சித்திரம் கண்டான்
அர்ச்சனைக்கு பாட்டெடுத்தான் வர்ணனையோ வர்ணனை

அம்பிகாபதி
பெண்ணே நின் பேரழகைச் சொல்ல
வல்ல தமிழ்ச் சொல் நிகண்டுகளில் இல்லையடி
என்றவன் தொடங்கும்போது தோகையும் வந்தாள்
கரிய முகில் உனக்கு முடியாய்ச் சுருண்டதோ
எட்டாம் பிறை நிலவு உன் நெற்றிக்கு நிகரோ
வேல் கொண்டே டோ மீன் கொண்டோ விழி யமைத்தார்
செம்பவளத்துண்டினால் இதழை இழைத் தாரோ
கடல் மூழ்கி முத்தெடுக்கின்றார் அறியாமை
நீ சிரித்தால் முத்து மழையாகப் பொழியாதோ
அழகொழுக பெண்மை திரண்ட பெருஞ் சுமையை
சின்ன இடை கொண்டு சுமக்கின்றாய் எப்படியோ
கருணையை அமுதாக நீ சுரந்து கொடுத்தால்
சம்பந்தன் என்ன நானும் ஓர் ஆயிரம் பாடேனோ
காஞ்சியில் தவமிருந்த காரிகையே

காவிரியின் ஓரத்தில் நீ காத்திருப்பது யாருக்கோ