பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

படலம் படலமாக படிக்கச் சுவைத்தனர்
வால்மீகி வரையாத பகுதி ஒன்று
இரானியன் வதைப்படலம் ஏதுக்கென்றனர்
பக்தியில் பெரிய பரம பாகவதன்
பிரகலாதன் பெருமையைப் பேசுவதற் கென்றார்
இரணியன் தூணை எட்டி உதைத்தான்
இருகூறாய் பிளந்தது—எரிமலை வெடித்ததோ
“சிரித்தது செங்கட் சீயம் என்றார்
அண்டம் அதிர்ந்ததோ வாணிடிந்து தகர்ந்ததோ
மோட்டழகிய சிங்கராய் நின்ற சிலை முழங்கிற்றம்மா
அதற்கு மேல் வாதாட வாயற்றுப் போனார்.
கம்ப ராமன் கவியரங்கேறினான்
அரங்கன் திருமுன் ஆராதனை வழிபாடு
பரிவட்ட மரியாதையுடன் பாயிரம் பாடினர்.
வடபுலம் சென்றிருந்த வளவர் கோன்
வாகைமேல் வாகை சூடி வந்தான்
அவன் வெற்றியினும் பெரிதென்றான் அரங்கேற்றம்
கம்ப நாடன் நடந்து திரிந்த
வழித்தடமெல்லாம் வரிவிலக்கென்றான்
வரவேற்பும் தனிவிருந்தும் பரிந்தளித்தான்
கூத்தர் தாதன் குணவீரர் புகழேந்தி
அம்பிகாபதிக்கும் அழைப்புக் கொடுத்தான்
தமிழுக்கு வாய்த்த தனிப்பெருமை என்னென்பேன்
மன்னவன் மகளே முன் நின்று பரிமாறினாள்