பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69


கூத்தர் குழைந்து நின்று கேட்டார்
சபையிலே பெரியதொரு பரபரப்புசலசலப்பு
மன்னவன் சிந்திக்க வேண்டும் என்றார்கள்
மாற்றென்ன சொல்லுங்கள் என்றான் சோழன்
இயற்கை சதிராட இளமை ஊஞ்சலாட
இளங்கவி தனைமறந்து உயரப் பறந்து விட்டான்
என்பதை மன்னிக்க மறக்க ஓர் நிபந்தனை
பேரின்பமாக ஒரு நூறு அவன் பாடவேண்டும்
ஆறை நகர் பேரவை ஆனந்தக் கடலானது
அந்தப் புரத்தில் அமராவதி உயிர்த் தெழுந்தாள்.
கூப்பிய கரத்தோடு கூத்தர் மேற் சாய்ந்த
கம்பரைத் தாங்கிப் பிடித்தான் தாதன்
நாள் குறித்தார் மேடையிட்டார்
காவலன் கொலுவிருந்தான் கம்பர்மகன் தொழுது நின்றான்
பன்னீராயிரம் பாடிய பாவலன் மகன்
நிபந்தனையில் வென்று நேரிழையை பரிசு கொள்ளானோ
எழுத்துக்கு எழுத்து ஆயிரம் பொன் கொடுத்த
மாவளவன் பரம்பரை மகள் கொடைக்கு மறுப்பானோ
என்ற நம்பிக்கையில் உயிர்த்திருந்தாள் அமராவதி!
பாட்டெண்ண, மலரெண்ணி நூறு கொண்டு வந்தாள்

அழுந்தூர் காளியை நினைவிலே நிறுத்தி