பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71


ஆன்றோர்கள் நூற்றுக்கு ஒன்று குறை என்றார்
வேந்தன் சிரித்தான் விதியும் சிரித்தது
கம்பர் அழுதார் காலம் அழுதது
நீதியும் நியதியும் அவன் தலையை விலைகேட்டது
குலோத்துங்கன் பேசவில்லை கொடுவாள் பளபளத்தது
அவன்சாவதற்கு சாவேன் என்றாள் அமராவதி
கல்லறை இரண்டுக்குக் கல்லடுக்கச் சொன்னான்
எதிர்சொல்லவாயில்லை! இருவரையும் உயிர் பறித்தார்
கம்பர் உயிர் கொதித்தார். தமிழும் தழலானது
என் மகனோடு உன் மகளும் போனாள் அந்தோ
தார்வேந்தே வேரற்றுப் போனதடா உன் குலம்
மன்னவனும் நீயோ வளநாடு உன்னதோ
உன்னையறிந்தோ தமிழை ஓதினேன்.
திருபுவனம் முழுதுடைய குலோத்துங்கச் சோழனே
முடிவில் நீயும் ஒரு பிடி சாம்பல் உணர்ந்திலையே
எரிகின்றேன் நெருப்பில்லை இருக்கின்றேன் உயிரில்லை
தமிழிருக்கும் வரை நானிருப்பேன்,
தரையிருக்கும் வரை நின்பழி இருக்கும்

என் தவம் இருக்கும் வரை நின் குலம் அறுக்கும்