பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20


அவள் சிந்தையில் கலந்திருந்தேன்
தெய்வ நினைவில் தெய்வம் ஆனவள்
அள்ளி எடுப்பாள் ஆரத் தழுவுவாள்
நான் வாலிபனல்ல பாலகிருஷ்ணன்
கேலிக்கு உரியவர்கள் கேளிக்கை என்றார்
ஞானியரோ குழந்தை என்று கொஞ்சுவார்
காதலியராகி கசிந்து உருகுவார்.


தலைவனாய்க் கொண்டுதொண்டராய்த் தொடருவார்
என்னை நினைந்து நினைந்து நானே யாவார்;
முகத்திரண்டு கண்ணும் மூடிகிடக்க
அகத்திருக்கும் கண்ணால் அகிலத்தை அளப்பார்
நீர்வளரும் தாமரை நீரால் நனைவதில்லை
ஞானியரும் உலகிலிருப்பார் உலகில் கலப்பதில்லை
நீரோடு கலந்த பால் தன் நிலை இழக்கும்
நெருப்பிலே சூடுண்டால் நெய்யாகப் பிரியும்
நெய்யான பின்னே நீரில் மிதக்கும்
மாய வலையில் இருக்கும் மானிடரும்
ஞானம் கைவந்தால் ஞாலத்தில் மூழ்கார்
எங்கும் எதிலும் இறைவனைக் காண்பார்
மலை முகட்டில் நின்று நிலம் நோக்கினால்
வானுயர வளர்ந்த நெடிய மரமும்
தரையிலே தாழ்ந்து படர்ந்த கொடியும்
பசுமையாகத் தெரிவதன்றி பேதம் தெரிவதில்லை
ஞானிக்கு அச்சுதனும் அர்ச்சுனனும் ஒன்றே
மனிதனும் மிருகமும் நண்பரும் பகைவரும்
வேறாகத் தெரிவதில்லை விதியைவெல்லுவார்
என்னைச் சரணடைந்தால் ஞானம் கைவரும்
உன்னோடு நானிருக்கிறேன் என்னோடு நீயில்லை
தேர் நடத்த வந்த என்னைத் தெரியவில்லை

போர் நடத்த மயங்குகின்றாய் ஏனோ?