பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

கடித்துச் சுவைத்து கனியைக் கொடுத்த
எச்சில் கலந்த அன்பும் அதுவே
சிந்தை அணுவெல்லாம் சிவனேயாக
செறுப்பால் உதைத்தது வேடபக்தி
மூடபக்தி சிசுவை சேறு மிதித்தது
முரட்டு பக்தி பிள்ளையைக் கறிசமைத்தது
சித்திரத்தில் சிற்பத்தில் சிலையில் பாவனையில்
தெய்வத்தை லயிப்பது கண்கண்ட பக்தி
செவிகளின் கடமை திருப்புகழ் கேட்பது
களிந்த பக்திக்கு நெஞ்சம் உருகும்
நுகருகின்ற மணத்திலெல்லாம் தெய்வம் கமழும்
நாக்கு ருசியை மறக்கும் அல்லால்
நாதன் நாமத்தை உறக்கத்திலும் உளறும்
தொழுகையும் தொண்டும் கைகளின் பொறுப்பு
தேவன் கோயிலை வலம் வருவதற்கே கால்கள்
என ஆற்றுகின்ற பக்தி இளைத்ததல்ல
நிலம் கடந்து நிறம் கடந்து மொழி கடந்து முறைகடந்து
உருகுகின்ற பக்திக்கு உருகாத தெய்வமில்லை
தாய்க்கு தன் மகன் அன்பு செய்தாலும்
தாயன்புக்கு மகன் தவித்து நின்றாலும்
அன்னையின் உள்ளம் அவனையே சுழலும்
அன்னையினும் பரிந்து அருளும் தெய்வமடா
முக்திக்கு உரியவழி பக்தி என்று உணர்க
பாவசமாகி நினைத்தவர் என்னைத் தெரித்தவ
அவர் இருக்கும் இடத்தில் எல்லாம் இருப்பேன்
அவர் தலைவனென்றால் நான் தொண்டனாவேன்
அவர் கவிஞன் என்றால் நான் எழுத்தாவேன்
அவர் ஆசான் என்றால் நான் சீடனாவேன்
அவர் தகப்பன் என்றால் நான் மகனாவேன்
அவர் தோழன் என்றால் நான் துணைவனாவேன்
மனித குலத்துக்கு என் பணி யுகத்துக்கு
யுகமாக தொடர்கின்றது இனியும் தொடரும்