பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. புனலாட்டுப் பத்து

இப் பகுதியில் அமைந்துள்ள பத்துச் செய்யுட்களும், மருத நிலத்தாரின் புனலாட்டும், அதன்கண்ணே நிகழும் செய்திகளும் கொண்டிருப்பன. தலைமகன் பரத்தையரோடு கூடிப்புனலாடினான் எனக் கேட்டுத் தலைமகள் புலந்து கூறுவதும், அவள் பொருட்டுத் தோழி கூறுவதும் மிகவும் நுட்பமான பொருட்செறிவு கொண்டனவாகும். அதனால். இதனைப் புனலாட்டுப் பத்து என்றனர்.

71. ஞாயிற்றொளியை மறைக்க முடியுமோ?

துறை : 'பரத்தையரோடு புனலாடினான்' எனக் கேட்டுப் புலந்த தலைமகள், தலைமகன் அதனை இல்லை என்று மறைத்துழிச் சொல்லியது.

[து. வி.: 'பரத்தையரோடு நேற்று நின் தலைவன் புதுப்புனலாடி இன்புற்றான்' என்று, தலைவியிடம் கண்டார் பலரும் வந்து கூறிப் போகின்றனர். அதனால், அவள் உள்ளம் நொந்து மிகவும் வாடியிருந்தாள். அப்போது, அவள்பால் வந்த தலைவனிடம் அதுபற்றிக் கேட்க, அவன் இல்லவே இல்லை என மறைத்துப் பேசுகின்றான். அப்போது, தலைவி சொல்லியதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

சூதார் குறுந்தொடிச் சூர்அமை நுடக்கத்து
நின்வெங் காதலி தழீஇ, நெருநை
ஆடினை என்ப, புனலே; அலரே
மறைத்தல் ஒல்லுமோ, மகிழ்ந?

புதைத்தல் ஒல்லுமோ, ஞாயிற்ற தொளியே!

தெளிவுரை : மகிழ்நனே! உள்ளே துளைபொருந்திய குறியவான தொடிகளையும்.அச்சம் பொருந்திய அசைவினையுமுடைய, நின் விருப்பத்திற்குரிய காதலியைத் தழுவினவனாக, நீயும் நேற்றைப்போதிலே புதுப்புனலாடினை என்பார்கள். ஞாயிற்றினது விரிந்து பரவும் ஒளியினை எவராலும் யாதாலும் மறைத்தல் முடியுமோ? அதுபோலவே, நீ புனலாடியதாலே