பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



11

எண்ணியே கண்டிராத பெருவளநிலையினை எய்தி, அதனல், இவனையே எப்போதும் போற்றி மகிழும் சால்புடையோனாகவே விளங்கினான் என்றும் அறிகின்றோம்.

இவனிடமிருந்து, பெற்ற பரிசில்களோடு, தன் நாடு நோக்கி மீள்பவன், ஒரு நாள் பாண்டியனது திருத்தங்காலிலே இளைப்பாறுதற் பொருட்டுத் தங்குகின்றான். அப்படித் தங்கியவன், தன் நாட்டு மன்னனையோ, தான் தங்கியுள்ள இடத்திற்கு உரியோனான பாண்டியனையோ வாழ்த்திப் பாடுதலை மறந்து, தன்னைப் பாராட்டிய சேரமானையே வியந்து வியந்து போற்றி வாழ்த்துகின்றான் என்றால், இச்சேரமானின் உள்ளச் செவ்வி, எத்துணை அளவுக்கு உயர்ந்ததாக இருந்திருத்தல் வேண்டும்.


---காவல் வெண்குடை
வளைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி!
கடற்கடம்பு எறிந்த காவலன் வாழி!
விடர்ச்சிலை பொறித்த விறலோன் வாழி!
பூந்தண் பொருனைப் பொறையன் வாழி!

மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்க!

என்று அவன் வாழ்த்தினான் என்கிறது சிலம்பு. பாண்டியனோடு போரிட்டு, அப் போரிலே தோற்றுச் சிறைப்பட்டு, எவ்வாறோ சிறையினின்றும் தப்பிச் சென்றவன் இம் மாந்தரஞ்சேரல் என்றும் கூறப்படுகின்றது. இவனைப் பாண்டிநாட்டிலேயே வந்திருந்து வாழ்த்துகின்றான் பாராசரன் எனில், இவனுடைய பிறபிற குணநலங்கள் அத்துணைச் சிறப்பு வாய்ந்தன என்றே நாம் கொள்ளல் வேண்டும். .

சேரநாட்டுத் தொண்டிப் பட்டினத்திலிருந்து அரசாண்டவன் இவன். யானைக்கட்சேய் எனச் சிறப்புப் பெயரும் பெற்றவன். இவன் தோன்றிய இரும்பொறை மரபினருள் புகழ்பெற்ற பிற மன்னர்கள், செல்வக்கடுங்கோ வாழி யாதனும், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையும் ஆவர். யானைகள் தம் கன்றுகளைப் பேணிக்காக்கின்ற பெருவிழிப்போடே தன் ஆட்சிக்கு உட்பட்டவர்களைக் காத்துப்