பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



130

ஐங்குறுநூறு தெளிவுரை


73. குவளை நாறிய புனல்!

துறை: மேற்பாட்டின் துறையாகவே கொள்க.

வண்ண ஒண்தழை நுடங்க, வாலிழை
ஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்ந்தெனக்,
கண்ணறுங் குவளை நாறித்

தண்ணென் றிசினே - பெருந்துறைப் புளலே!

தெளிவுரை : அழகிய ஒளிகொண்ட தழையுடையானது அசைந்தாட, தூய அணிகளையும் ஒள்ளிய நுதலையும் கொண்ட அரிவையாளவள், புனல் விளையாட்டிடத்தே பெருந்துறைப் புனலிலே பாய்ந்தாளாக, அந்நீரும் இவள் கண்ணென்னும் நறிய குவளைமலரின் மணத்தை உடையதாகித், தண்ணிதாகியும் குளிர்ந்துவிட்டதே!

கருத்து: 'அவள் இப்போதும் என்னுடன் வர மறுப்பதிலள்' என்றதாம்.

சொற்பொருள்: வண்ணம் - அழகு; பல வண்ணமும் ஆம். ஒண்தழை - ஒளிசெய்யும் தழையுடை; ஒளிசெய்தல், பெரும்பாலும் தளிராலேயே தொடுக்கப்ப.ட.லால்; வெண் தழை என்றும் பாடம். வாலிமை - தூய்மை. பண்ணை - விளையாட்டு.

விளக்கம் : இவள் புனலாட நீரிற் குதித்தபோது, நீரும் இவள் குவளைக்கண்ணின் சேர்க்கையால் குவளைநாறி, இவள் மேனியின் தொடர்பால் தண்ணென்றாயிற்று எனப் போற்றிப் புகழ்ந்து உரைக்கின்றனன். இதனால் மனம் பழைய நினைவிலே தாவிச் சென்று மகிழத், தலைவியும் தன் புலவிநீங்கித் தலைவனோடு புனலாடச் செல்வாள் என்பதாம்.

மேற்கோள் : இஃது உருவுவமப்போலி; நீ புனலாடிய ஞான்று பரத்தை பாய்ந்தாடிய புனலெல்லாம் தண்ணென்றதெனக் கூறியவழி, அத் தடம்போல, இவள் உறக்கலங்கித் தெளிந்து தண்ணென்றாள் என்பது கருதி உணரப்பட்டது.

அவளோடு புனல்பாய்ந் தாடிய இன்பச்சிறப்புக் கேட்டு நிலையாற்றாள் என்பது கருத்து என்பர் பேராசிரியர் (தொல். உவம. 25)