பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மருதம்

137


தெளிவுரை: 'புதுப்புனலிலே ஆடிச் சிவந்த கண்களை உடையவளான இவள் யார் மகள்?' என்று சொல்லியபடியே கைப்பற்றிய தலைவனே! இவள் யார்மகள் ஆயினும், நீதான் அறியமாட்டாய்; ஆயின், எம்மை வந்து பற்றியவனே, நீதான் யாவர் மகனோ?' என்பதாம்.

கருத்து: 'நீ எமக்கு அயலானே போல்வாய்' என்று கூறி ஒதுக்க முயன்றதாம்.

சொற்பொருள்: அமர்த்த கண் - சிவந்த கண். அறியாய் - அறிய மாட்டாய். 'எம்' என்றது, பரத்தையை உளப்படுத்திக் கூறியது. விளக்கம்: 'யார் மகள் இவள்?' எனக் கேட்டவாறு கைப்பற்றியவன் ஆதலின், முன்பே தொடர்புடையவன் என்பதும், 'யார் மகள்?' என்றது அறியான்போல வினாவியது என்பதும், அது அவளிடம் பழைய உறவை நினைவுறுத்தித் தெளிவித்தற் பொருட்டு என்பதும் உணரப்படும். 'நீ யார் மகன்?' என்று தோழி வினாயது, அறிந்தும் அறியான்போல வினாவுகிற நீதான், நின்னை மறைத்துப் பேசுதலின், 'யாவர் மகனோ?" எனக் கேட்டதாம். பண்பாட்டி பெற்ற மகனல்லை' என்றதாகக் கருதுக.

புதுப்புனலாடி அமர்த்த கண்ணள்' என்றது, 'முன் கலவிக்களியாலே சிவந்த கண்ணளாகியவள்' என்று, பழைய களவுக்காலத்து உறவை நினைப்பித்ததுமாம்.

80. நின் கண் சிவந்தன!

துறை : தன்னை ஒழியப் புதுப்புனலாடித் தாழ்ந்துவந்த தலைமகனோடு, தலைமகள் புலந்து சொல்லியது.

[து. வி.: தன்னை உடனழைத்துப் போய்த் தன்னுடன் புனலாடி மகிழாமல், தான் மட்டுமே தனியனாகச் சென்று, அங்கு நீராடிய பரத்தையருடன் நெடுநேரம் கூடிப் புனலாடி வீடு திரும்புகின்றான் தலைவன். அவனின் சிவந்த கண்களையும், அவன் நீராடிவந்துள்ள நிலையையும் கண்டு, புலவிகொண்ட தலைமகள் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

புலக்குவேம் அல்லேம்; பொய்யாது உரைமோ
நலத்தகை மகளிர்க்குத் தோள்துணை யாகித்,
தலைப்பெய்ற் செழும்புனல் ஆடித்

தவநனி சிவந்தன, மகிழ்ந! நின் கண்ணே,