பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

ஐங்குறுநூறு தெளிவுரை


92. நும் ஊர் வருதும்!

துறை : 'நினக்கு வரைந்து தருதற்குக் குறை, நின் தமர் அங்கு வந்து கூறாமையே' எனத் தோழி கூறினாளாக, தலைமகள் முகம் நோக்கி, 'இவள் குறிப்பினாற் கூறினாள்' என்பது அறிந்த தலைமகன், 'வரைவு மாட்சிமைப்படின் நானே வருவல்' எனத் தலைமகட்குச் சொல்லியது.

[து. வி.: 'இவள் இந்நாள்வரை மணம் பெறாமல் வாடி நலிவது, நின் தமர் வந்து வரையாததன் குறையே' என்று தலைவனிடம் தோழி கூறுகின்றாள். தலைவியின் குறிப்பும் அதுவே}}யாதலை அறிந்த தலைமகன், 'வரைவதற்குரிய நிலைமை சிறப்பின் யானே வரைவொடு வருவேன்' எனத், தன் உள்ளவுறுதி தோன்றக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

கருங்கோட் டெருமைச் செங்கண் புனிற்றாக்
காதற் குழவிக்கு ஊறுமுலை மடுக்கும்
நுந்தை நும்மூர் வருதும்

ஒண்தொடி மடந்தை! நின்னையாம் பெறினே.

தெளிவுரை : கரும் கொம்புகளையுடைய எருமையின், சிவந்த கண்களையுடைய புனிற்றாவானது. தன் அன்புக் கன்றுக்குச் சுரக்கும் முலையினைத் தந்து பாலூட்டும் நின் தந்தைக்குரிய நினது ஊருக்கு, ஒள்ளிய தொடியணிந்த மடந்தையே! நின்னை யான் மனையாட்டியாகப் பெறுதல் கூடுமாயின், யானே வரைவொடு வருவேன்!

கருத்து? 'தமரி வரவு தாழ்த்தவிடத்தும், தான் தாழாதே வரைந்து வருவேன்' என்று கூறியதாம்.

சொற்பொருள்: கருங்கோடு - கரிய கொம்பு. செங்கண் புனிற்றா - ஈன்றதன் அணிமையும், சிவந்த கண்களையுமுடைய தாய் எருமை. ஊறுமுலை - பால் ஊறுகின்ற முலை; பால் ஊறுதல் ஈன்றதன் பின்னரே என்பது குறிக்க, 'ஊறுமுலை' என்றனர். மடுக்கும் - உண்பிக்கும்; அது தானே உண்ணாமையான், தான் அதன் வாயிலே பால்முலை சேர்த்து அதனை உண்பிக்கும் என்றதாம். நுந்தை நும்மூர் - நின் தந்தையதாகிய நுமது ஊர். பெறின் - பெற்றனமானால்; பலகாலமும் அடையப்பெறாதே ஏங்கித் திரும்பும் தன் ஏக்கம் புலப்படக்கூறியது, தான் வரைந்துவரின், தமர் மறுப்பினும் தலைவி