பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

ஐங்குறுநூறு தெளிவுரை


[து. வி.: தன்னைப் பிரிவாலும், ஊரவரின் அலர்ச் சொற்களாலும் நலியச் செய்தவனாகப், பரத்தையர் பலரோடும் களித்துத் திரிந்த தலைவனின் கொடுமையைப் பொறாதே வருந்தியிருந்தாள் ஒரு தலைவி. ஆனால் அவன், ஒருசமயம் தன் மனையிடத்தேயும் புகுந்தபோது, அவள் தன்னுடைய வேதனையை எல்லாம் மறந்து, அவனோடும் இசைந்துகூடி அவனை இன்புறுத்தினள். அவளது, அந்தக் கற்புச்செவ்வியைக் கண்ட அவ்வீட்டு வேலையாட்கள், தமக்குள்ளே வியந்து, பெருமையோடு பாராட்டிச் சொல்லிக்கொள்வதாக அமைந்த செய்யுள் இது.]

அணிநடை எருமை ஆடிய அள்ளல்
மணிநிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும்
கழனி யூரன் மகள், இவள்;

பழன ஊரன் பாயலின் துணையே!

தெளிவுரை : அழகான நடையையுடைய எருமையானது புகுந்து கலக்கிய சேற்றினிடத்தே, நீலமணியின் நிறத்தைக் கொண்ட நெய்தலோடு. ஆம்பலும் தழைக்கின்ற கழனிகளையுடைய ஊரனின் மகள் இவள்! இவள்தான் பழனங்களையுடைய ஊரனாகிய தலைவனின் பாயலிடத்தே பொருந்தி விளங்கும் இனிதான துணையாகவும் ஆயினளே!

கருத்து: 'இவள் கற்பின் மாண்புதான் என்னே!' என்றதாம்.

சொற்பொருள்: அணிநடை - அசைந்தசைந்து பெருமிதம் தோன்ற நடக்கும் நடை; 'அணிநிறம்' எனவும் பாடம். ஆடிய அள்ளல் - உழக்கிய சேறு. கலிக்கும் - முளைத்துச் செழித்து வளர்ந்திருக்கும். கழனி - வயல். பாயல் இன்துணை - பள்ளியிடத்தே இனிதான துணையாக விளங்கும் உயிர்த்துணை. பழனவூரன் - பொதுநிலம் உள்ள ஊரன்; இது அவன் பரத்தையர் பலருக்கும் உவப்பளிப்பானாக விளங்கிய பொதுத்தன்மை சுட்டியது.

விளக்கம்: தாம் செழித்து வளர்தற்குரிய இடமான கழனியிடத்தே புகுந்து, தம் நிலைக்கு ஆதாரமான சேற்றிலே நடந்தும் புரண்டும் அதனை உழக்கி அழிவுசெய்த எருமையின் மீது ஆத்திரப்படாமல், தான் மீண்டும் கலித்துச் செழித்து அதற்கே உணவாகிப் பலனளிக்கும் நெய்தலையும் ஆம்பலையும் கொண்ட கழனிகளுக்கு உரியவன் இவளின் தகப்பன்! அவன் மகளாதலின், இவளும், தனக்கே துயரிழைத்த தலைவனுக்கும் அத்துயர் மறந்து தண்ணருள் செய்வாளாய்ப், பாயலின்