பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

ஐங்குறுநூறு தெளிவுரை


கருத்து: 'இவள் என்றும் என்பாற் குளிர்ந்த அன்பினளே' என்று வியந்ததாம்.

சொற்பொருள்: வான்மலர் - வெண்ணிறப் பூ. வெரூஉம் - அஞ்சும். பொய்கைப் பூ - பொய்கையிடத்தே பூத்திருக்கும் ஆம்பற் பூ. தண்ணியள் - தண்மையானவள்: தண்மை அன்பின் நெகிழ்வு குறித்தது; இதன் எதிர் சினத்தின் வெம்மை.

விளக்கம் : சேற்றையாடி வ்ரும் எருமைக் கொம்புகளிலே சிலசமயம் பூக்களோடு விளங்கும் பகன்றைக் கொடி சுற்றிக்கொண்டிருப்பதும் உண்டு. இதனை, 'குரூஉக் கொடிப் பகன்றை சூடி மூதூர்ப் போர்ச்செறி மள்ளரிற் புகுதரும்' என்று. அகநானூற்றினும் காட்டுவர்- (அகம். 316). 'பொய்கைப் பூவினும் தண்ணியள்' என்றது, இயல்பாகவே தண்மையுடைய மலரினும், பொய்கை நிரிடத்தேயே பூத்திருக்கும் பூவிடத்தே தண்மை மிகுதியாயிருக்கும் என்பதறிந்து கூறியதாகும். இதனால், தன் மனைவியின் செவ்வியைப் பெரிதும் எண்ணி வியந்து போற்றினனாம். . 'பொய்கை' அணுகும் போதெல்லாம் தண்மையே தந்து இன்புறுத்தலேபோலப், பொய்கையூரனின் மகளான இவளும் எனக்கு என்றும் இனியவே செய்யும் இயல்பினளாயினள்' என்கின்றான்.

உள்ளுறை: தாயெருமையின் கோட்டிற் கிடந்த பகன்றை மலரைக் கண்டு, அதனை வேறாக நினைத்து அதன் கன்று வெருவினாற் போலத், தன் மார்பிடத்து மாலையினைக் கண்டு, பிறர் சூட்டியது எனப் பிறழக்கொண்டு, தன்னை வேறுபட்டானாக நினைத்துத் தலைவியும் வெறுவி அஞ்சினள் என்றதாம்.

கன்று அஞ்சினும், அதனை நெருங்கி அதன் அச்சம் தீர்த்துப் பாலூட்டி இன்புறுத்தும் தாயெருமையின் செவ்விபோல அவள் தன்னைப் புறத்தொழுக்கத்தானென மயங்கிப் புலப்பினும், தான் அப்புலவி நீக்கி அவளை இன்புறுத்தும் அன்புச்செவ்வியன் எனத் தலைவன் சொல்வதாகவும், உவமையால் உய்த்து உணரப்படும்.

பொய்கைப் பூவானது நீரிடையுள்ளதன் வரையுமே அழகும் தண்மையும் பெற்று விளங்கி, நீரற்றபோதில் வாடியழிவதே போலத், தலைவியும் தன் காதலன்பிலே