பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

167


வெறாதே ஏற்று, மனைக்குள்ளேயும் அழைத்துச் சென்று, அவன் விரும்பியவாறு எல்லாம் நடந்து அவனை மகிழ்விக்கின்றனள். அவள் பண்பினைக் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்த தலைமகன் தன்னுள் உவந்தானாகச் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும். ]

பழனப் பாகல் முயிறுமூசு குடம்பை
கழனி எருமை கதிரொடு மயக்கும்
பூக்கஞ லூரன் மகள், இவள்;

நோய்க்குமருந் தாகிய பணைத்தோ ளோளே!

தெளிவுரை : பழனத்துப் பாகலிலேயுள்ள முயிறுகள் மொய்த்து உறைகின்ற கூடுகளை, கழனியிடத்தே மேய்கின்ற எருமையானது நெர் கதிரோடும் சேர்த்துச் சிதைக்கும் தன்மை கொண்ட, பூக்கள் நிறைந்த ஊரனின் மகளான இவள்தான், யான் கொண்ட காமமாகிய நோய்க்கு மருந்தாக விளங்கி, அதனைத்தீர்த்த பணைத்த தோள்களையும் உடையவளாவாள்!

கருத்து: 'நோய்க்கு மருந்தாகும் தோளாள் இவள்' என்றதாம்.

சொற்பொருள்: முயிறு மூசு குடம்பை - முயிறுகள் மொய்த்த படியிருக்கும் கூடு; முயிறுகள் மரத்தின் இலைகளைப் பிணைத்துத் தாம் முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பெற்று வளர்த்தற்கான கூடுகளை அமைப்பதை இன்றும் காணலாம். 'பழனப் பாகல் முயிறுமூசு குடம்பை கழனி நாரை உறைத்தலின், செந்நெல், விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன்' என அகநானூறும் காட்டும் - (அகம். 255). மயக்கும் - சிதைக்கும். நோய் - காமநோய்.

விளக்கம்: உழவர்க்கே கழனியிடத்துப் பயன்காணலிலே உதவிநின்று சிறத்தற்குரிய எருமையானது, அக்கழனியிடத்தே பயன் நிரம்பிய நெற்கதிரைச் சிதைத்தலோடு. புறத்தே பழனத்திடத்தே பாகலில் விளங்கும் முயிறுகளின் கூடுகளையும் சிதைக்கின்ற கொடுமையினையுடைய ஊரனின் மகள் என்றது, ஆங்கதுதான் செருக்கித் திரிவாரின் இயல்பென உணர்ந்த வளாதலின், யான் எருமை விளைவயற் கதிர்சிதைத்தாற்போல அவளின் இல்லறத்தைச் சிதைவித்ததும், எருமை புறத்தே பழனப்பாகல் முயிறுமூசு குடம்பையை அழித்தாற் போல, பரத்தையர் சேரியிலே தாயரின் கட்டுக்காவலைக் கடந்துவரச் செய்து பரத்தையர் பலரை மயக்கி இன்பம் நுகர்ந்தபின்