பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



188

ஐங்குறுநூறு தெளிவுரை



கருத்து: "அவன் எம்மையன்றிப் பிறரை நாடான்" என்றதாம்;

சொற்பொருள்: முண்டகம் - நீர் முள்ளி. ’எம்தோள்’ தலைவியின் தோள்நலத்தைச் சுட்டியது; 'ஒன்றித் தோன்றும் தோழி மேன" என்னும் விதியையொட்டி வந்தது. துறந்தனன் - கைவிட்டனள். . விளக்கம்: வரைவு நீடிக்கவே, செவிலி பலவாறாக எண்ணி ஐயங்கொள்கின்றாள்; அவள் ஐயம் அனைத்தும் பொருந்தாதெனத் தோழி மறுப்பவள், இவ்வாறு கூறுகின்றாள் என்று கொள்க. 'எம்மையே அவன் மறந்தான் என்றால், அவன் விரும்பிய பிறரின் கதிதான் யாதோ?’ என்னும் கூற்றிலே, அவன் எம்மை மறக்கவே மாட்டான் என்ற உறுதிப்பாடே புலப்படக் காணலாம். 'உழுவலன்பாலே ஒன்றுபட்டார் இடையே வேற்றுவரைவுகள் நிகழா' என்பதும் நினைக்க.

மேற்கோள்: 'இதனுள் கழிய முண்டக மலரும்' என முள்ளுடையதனைப் பூ மலருமென்று உள்ளுறுத்ததனால், இருவர் காமத்துறைக் கண்ணும் ஒருதலை இன்னா ஒருதலை இனிது என்றாள் என்பது ’என் தோள் துறந்தனன்' என்பது முள்உடைமையோடு ஒக்க, ’என்னாங்கொல் அவன் நயந்த தோள்' என்றவழி அவன் அன்பில் திரியாமை கூறினமையின், முண்டக மலர்ச்சியோடு ஒப்பிக்கப்படும் என்பர் பேராசிரியர் - (தொல். உவம. 59).

’அறத்தொடு நின்றபின் வரைவு நீட மற்றொரு குலமகளை வரையுங்கொல்?' என்று ஐயுற்ற செவிலி குறிப்பறிந்த தோழி, அவட்குக் கூறியது என்று காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். களவு. 23).

109. பல நாளும் வரும்!

துறை: அறத்தொடு நின்ற பின்பு, வரைவான் பிரிந்த தலைமகன், கடிதின் வாராதவழி ஐயுற்ற செவிலி, 'அவன் நும்மைத் துறந்தான் போலும்; நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?" என்றாட்கு, தோழி சொல்லியது.

[து. வி.: வரைந்து வருவதாகத் தலைவன் குறித்த காலம் கடந்து, மேலும் பல நாட்களும் கழிந்தும், அவளை வரக்காணாத