பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

189


செவிலியின் உளத்திலே, கவலையலைகள் எழுந்து மோதுகின்றன. 'அவன் உங்களை ஒதுக்கிவிட்டான் போலும்? அவள் உங்களிடம் என்னதான் சொல்லிப்போனான்?' என்று தோழியை நோக்கிக் கேட்கிறாள். அவட்குத் தோழி உறுதியோடு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

அன்னை வாழி! வேண்டு அன்னை! - நெய்தல்
நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன்
எம்தோள் துறந்த காலை, எவன்கொல்

பன்னாள் வரும் அவன் அளித்த பொழுதே?

தெளிவுரை : வாழ்வாயாக அன்னையே! இதனையும் விருப்போடே கேட்பாயாக. நீரிடத்தே படரும் நெய்தலது உட்டுளை கொண்ட கொடிகளிலே, மிகுதியான பூக்கள் மலர்ந்திருக்கும் துறைவனாகிய தலைவன், எம் தோளைத் தழுவிப்பிரிந்த அந்தக் காலத்திலே, அவன் எமக்குத் தலையளி செய்து மகிழ்வித்த அந்தப் பொழுதின் நினைவே, மீளவும் பல நாட்களும் எம்மிடத்தே வந்தபடி யுள்ளனவே? இதுதான் எதனாலோ அன்னாய்?

கருத்து: "காலந்தாழ்ப்பினும், அவனே சொன்னபடி வந்து மணப்பான்" என்பதாம்.

சொற்பொருள்: நீர்ப்படர் - நீரிலே படரும். தூம்பு - உள்ளே துளையுடைய தன்மை. அத்தன்மையுடைய நெய்தற் கொடிக்கு ஆயிற்று. பூக்கெழு - பூக்கள் பொருந்தியுள்ள 'தூம்பின் பூ' என்று கொண்டு, துளையமைந்த பூவென்று உரைப்பினும் பொருந்தும், அளித்த பொழுது - தலையளி செய்து இன்புறுத்திய பொழுது.

விளக்கம் : அவன் குறித்த அந்த நாள் எல்லை கடந்தாலும், அவன் எம்மைத் தழுவிக்கூடியதான அந்தப் பொழுதின் நினைவு எம்மிடம் பலநாளும் மாறாதிருக்கின்றன; ஆதலின், அவன் வந்து எம்மை வரைந்து மணப்பான் என்னும் உறுதியுடையோம் என்கின்றனள். தலைவியின் காதன்மை மிகுதியும் ஆற்றியிருக்கும் திறனும் காட்டுவது இது. இதுவே பிரிந்தார் இயல்பாகும் என்பதைப் பிறரும் கூறக் காணலாம் - (குறு. 326).

உள்ளுறை : 'நெய்தல் நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன்' என்றது, நீருள்ளேயே படர்ந்து வெளித்தோன்றாவாறு மறைந்து விளங்கினும், நெய்தற் கொடியானது பூக்