பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. தோழிக்கு உரைத்த பத்து

தலைமகள், தன் தோழிக்குத் தன் உள்ளத்தின் போக்கைச் சொல்வதாக அமைந்தன இப்பத்துச் செய்யுட்களும். ஆதலின் இத் தலைப்பின்கீழ் தொகுத்துள்ளனர். தலைமகளின் ஆர்வமும் பண்பும், பேசும் பேச்சின் சால்பும், இவற்றுட் காணப்படும்.

111. பிரிந்தும் வாழ்துமோ!

துறை: 'இற்செறிப்பார்' எனக் கேட்ட தலைமகள், வரையாது வந்து ஒழுகும் தலைவன் சிறைப்புறத்தானாகத், தோழிக்குச் சொல்லியது.

[து. வி.: தலைவியை வரைந்து மணந்து கொள்வதற்கு முயலாது, களவின்பத்தையே பெரிதும் நாடுபவனாகத் தலைவன் தொடர்ந்து வருகின்றனன். தன் களவுறவைப் பெற்றோர் அறிந்தனராதலின் இற்செறிப்பு நிகழும் எனவும், அவனுக்கு ஊறு விளையும் எனவும், அவனைக் காணல் இயலாது எனவும் பெரிதும் அஞ்சுகின்றாள் தலைவி. குறித்த இடத்தே வந்து, செவ்விநோக்கித் தலைவியைத் தழுவுதற்குக் காத்திருப்பவனாக, ஒருசார் மறைந்திருந்து, தான் வந்துள்ள குறிப்பையும் தலைவன் உணர்த்துகின்றான். அதனைக் கேட்டு, அவன் வரவு அறிந்த தலைவி, அவன் மனம் வரைதலில் விரைவுறுமாறு, தன்னுடன் இருக்கும் தன் தோழிக்குச் சொல்வாள்போல, அவனும் கேட்டறியச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.

அம்ம வாழி, தோழி! பாணன்
சூழ்கழி மருங்கில் நாணிரை கொளீ இச்
சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை
பிரிந்தும் வாழ்துமோ நாமே-

அருந்தவம் முயறல் ஆற்றா தேமே.

தெளிவுரை : தோழி. இதனைக் கேட்பாயாக! பாண்மகன், கழிகள் சூழ்ந்த இடத்தே சென்று, தூண்டிற் கயிற்றிலே இரையைக் மாட்டிவைத்து. அதனைப் பற்றவரும் சினைப்பட்ட கயல்மீன்களை அகப்படுத்திக் கொல்லும் துறையையுடைய