பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

193


வனின் உறவினைப் பிரிந்தும் நாம் உயிருடன் வாழ்வேமோ! அங்ஙனம் பிரிந்தும் உயிர்வாழ்தற்கேற்ற மனவலுவைத் தரும் அரிய தவத்தினை மேற்கொள்ளவும், நாம் இயலேம் அல்லம் அன்றோ!

கருத்து: 'நம் இத்தகு அவலநிலையினை அவன் உணர மாட்டானோ?' என்பதாம்.

சொற்பொருள்: கழி சூழ் மருங்கு - கழிகள் சூழ்ந்துள்ள கடற்கரைப் பாங்கர். நாண் இரை கொளீஇ - நாணிலே இரையினைக் கொழுவி வைத்து. முயலல் - செய்தல். ஆற்றாதேம் - இயலாதேம். ஆசையை அடக்குதலே தவம்; அதுவே மிக்கெழுதலால் 'அருந்தவம் ஆற்றுதேம்' என்கின்றனள்.

விளக்கம்: 'தாணிலே மீனுக்குரிய இரையை மாட்டி வைத்து, அதனைப் பற்றும் சினைக்கயல் தூண்டில் முள்ளிலே மாட்டிக்கொள்ளத், தான் அதனைப் பற்றிக் கொல்லும் பாணன்' என்றது. அவ்வாறே பொய்ச்சூள் பலவும் நமக்கு நம்பிக்கையுண்டாகுமாறு சொல்லி, நம்மைத் தெளிவித்துத் தன்னோடும் சேர்த்துக்கொண்ட நம் காதலன், நம்மை மணப்பதற்கு முயலாதே போவதால், நாம் இற்செறிப்பால் நலிந்து, பிரிவினாற் பெருகும் காமநோயால் இறந்துபடுதலையும் செய்யும் அருளில்லாக் கொடியனாயினான் என்பதாம்.

இதனைக் கேட்கும் தலைவன், தலைவியை மணந்து கொள்ளும் வரைவு முயற்சியினை விரையச் செய்தலிலே மனஞ்செலுத்துவான் என்பதாம்.

'நாளிரை' என்பதும் பாடம்; இதற்குப் பாணன் தன் நாளுணவைக் கொண்டபின், சினைக்கயலைச் சென்று மாய்க்கும் என்றும் பொருள் கொள்ளலாம். கூடியின்புற்று மகிழ்ந்த தலைவன், நம்மை முறையாக மணந்து வாழ்விக்க நினையாதே. மீளவும் களவுக்கூட்டமே கருதி வருவானாய், நம்மை இன்பம் காட்டிப் பற்றிப், பின் மாய்க்கும் துயருட் செலுத்துகின்றான் என, அதற்கேற்பப் பொருள் கொள்க. 'அருந்தவம் முயலல் ஆற்றாதேம்' என்றது, அவனை விரைந்து வரைவொடு வருமாறு செய்தற்கும், அது பிழைத்தவழி பிரிவுத்துயர் பொறுத்திருந்து உயிரைப் போகாதே தடுத்துக் காத்தற்கும், 'இரண்டும் ஆற்றாதேம்' எனத் தம் ஏலாமை கூறினாள் என்க.

உள்ளுறை: 'சூழ்கழி மருங்கில், பாணன் நாண்இரை கொளீஇச் சினைக்கயல் மாய்க்கும் துறைவன்' என்றது, தன்

ஐம். --18