பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

203


முயலாதே. அவனுடன் இசைந்து ஒழுகி மீண்டேன்; இதனை நீயும் அறிவாய்; ஆதலின். என்னைப் பொறுப்பாய்" என்பதாம். தோழியும், தலைவியின் கற்புச் செவ்வி நோக்கி, அவள் செயலையே சரியாகக் கொள்வாள் என்பதாம்.

119. பெரிதே அன்பிலன்!

துறை : 'வரைதற்கு வேண்டுவன முயல்வேம்' எனச்சொல்லி, வரையாது ஒழுகுகின்ற தலைமகன் சிறைப்புறத்தான் ஆனமை அறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

[து. வி.: 'வரைதலுக்கு முயல்வேன்' என்று உறுதிகூறிச் சென்றவன், அது செய்யாது, மீண்டும் களவையே விரும்பி வந்து, சிறைப்புறத்தானாகியது அறிந்த தலைவி, அவனும் கேட்டு அறியுமாறு, தோழிக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

அம்ம வாழி, தோழி! நன்றும்
எய்யா மையின் ஏதில பற்றி,
அன்பிலன் மன்ற பெரிதே -

மென்புலக் கொண்கன் வாராதோனே!

தெளிவுரை : வாழ்வாயாக தோழி! இதனையும் நீ கேட்பாயாக. நெய்தல் நிலத்தானாகிய தலைவன். நம்மை வரைதலான நல்ல மரபினை அறியாதேயே உள்ளனன்: அதனாலே, அயலானவைகளைப் பற்றியே செல்லுகின்றனன். அவன் நம்மீது பெரிதும் அன்பில்லாதான் என்றே நாமும் அறிகின்றோம் - (என் செய்வேம்.)

கருத்து : 'அவனை நம்பி நம்மைத் தந்த நாமே தவறினோம்' என்பதாம்.

சொற்பொருள்: மென்புலம் - நெய்தல் நிலம்: நன்றும் நன்மை தருவனவான ஒழுக்கங்களையும். எய்யாமை - அறியாமை. ஏதில - அயலான ஒழுக்கங்கள்; களவே நாடிப் பொறுப்பை ஒதுக்கிவரும் செயலும், நினைவும்.

விளக்கம்: அவன் வரைந்து வாராமை பிறவற்றால் அன்று நமக்கு நன்மையாவது மணவாழ்வே என அறியாதவனாதலின், களவே நமக்கு இன்பமாவது என எண்ணி, அதுவே பற்றி நடந்து வருகின்றனன். ஆதலால் அவன் அன்பில்லா