பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. கிழவற்கு உரைத்த பத்து

தலைமகனுக்குச் சொல்லிய பத்துச் செய்யுட்களின் தொகுப்பு இப்பகுதி. 'தலைமகன்', 'தலைவன்' என்னும் பெயர்களே, அவர்கள் குடிநெறி பிறழாத் தலைமை வாழ்வினரென்றும், தம்முடைய தலைமைப்பாட்டையும் அறநெறிகளையும் பேணுதற்கு உரியர் என்று காட்டும். இத்தகு தலைமையினைப் பிறப்பால் உடையாரும் தவறும்போது, அவர்க்குப் பிறர் அதனை உணர்த்திச் சொல்வன, ஆழமான உணர்வுநயச் சொற்களாகும். "தலைவன்', 'கிழவன்' எனனும் உரிமைப் பெயரோடும் சுட்டப்படுதலின், 'கிழவற்கு உரைத்த பத்து' என்றனர்.

121. நின் கேளைக் கண்டோம்!

துறை : பரத்தை தலைமகற்குச் சொல்லியது. (1). பெதும்பைப் பருவத்தாள் ஒரு பரத்தையோடு கூடி மறைந்து ஒழுகாநின்றான்' என்பது அறிந்து தலைவி புலந்துழி, 'இத் தவறு என்மாட்டு இலை; நீ இப் புலவியை நீக்கவேண்டும்' என்று தோழிக்குத் தலைமகள் கூற, புலவியை நீக்கக் கருதிய தோழி, அவள் இளமை கூறி நகையாடிச் சொல்லியதூஉம் ஆம் - (2).

[து. வி. தலைவன் தன்னை மறந்தானாய்க் கைவிட்டுத் தன் மனைவியிடத்தே போதற்கு நினைகின்றான் என்பதனைக் குறிப்பால் உணர்ந்தாள், பரத்தை. அவள், அவனுக்கு அது பற்றிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது (1).

தலைவன் பரத்தையுறவினன் என்று அறிந்து, அவனோடு புலந்து ஒதுங்குகின்றாள் தலைவி. அதனை நீக்கிக் கூடியின்புறவும், அவளைத் தெளிவிக்கவும் கருதிய தலைவன், 'தான் ஏதும் பிழை பாடாக நடந்திலன்' என்று தோழிக்கு உறுதிகூறி, அவள் உதவியை நாடுகின்றான். அவள் தலைவியின் இளமைபற்றிச் சொல்லி, அவளை மறந்து பரத்தைமை நாடித் திரியும் அவன் இழுக்கம்பற்றியும் நகையாடிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது - (2) ]

இப் பகுதிச் செய்யுள்கள் அனைத்திற்குமே இத் துறைகளுள் ஒன்றே பொருத்திப் பொருள் கொள்ளல் வேண்டும். ஒரே