பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



208

ஐங்குறுநூறு தெளிவுரை


பால் நெஞ்சம் தாவிச்செல்ல, என்னையும் மறந்து அன்று மயங்கினையல்லையோ?" என்றதாகக் கொள்க.

தோழி கூற்றாயின், 'அவளைத் தனித்து நீராடும் துயரிலே வீழ்த்திவிட்டு, நீ இன்னொருத்தியோடு சென்று கடலாடலையாம் எம் கண்ணாரக் கண்டேமாயிருந்தும், நீதான் பொய்யுரைத்தல் எதற்கோ? இனியேனும், அவள் இளமை நெஞ்சறிந்து, அவள் நின் கேளென்ற நினைவின் உணர்வோடு, அவளைப் பிரிந்து வாடி நலனழியவிட்டு கூடியின்புற்று புறம் போகாவாறு, வாழ்வாயாக' என்றதாகவும் கொள்க!

122. குருகை வினவுவோள்!

துறை: மேற்செய்யுளின் துறையே இதுவும்.

கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே?
ஒள்ளிழை உயர்மணல் வீழ்ந்தென

வெள்ளாங் குருகை வினவு வோளே!

தெளிவுரை: கொண்கனே! தன் ஒள்ளிய இழையானது மணல் மேட்டிலே வீழ்ந்ததென்று, மிகவும் வருந்தியவளாக, அருகே காணப்பெற்ற வெள்ளாங்குருகினை விளித்து, 'நீ கண்டனையோ?" என்று வினவுகின்ற நின் உரிமையாட்டியை யாமும் கண்டேம் அல்லேமோ!

கருத்து: 'அவள் நின் கேள் அல்லவோ!' என்றதாம்.

சொற்பொருள்: உயர் மணல் - மணல் மேடு. ஒள்ளிழை - ஒளி மிகுந்த இழை; எளிதாகவே கண்ணிற் படக்கூடியது என்பது கருத்து. வெள்ளாங் குருகு - கடற்பறவை இனத்துள் ஒன்று.

விளக்கம்: 'அத்தகு முதிரா அறிவினளின் நெஞ்சை நைந்து நோகச்செய்தல் நினக்குத் தகாது' என்பதாம்.

இது தலைவனிடமிருந்து உண்மையினை அறிவதற்காகச் சொல்லப்படும் குற்றச் சாட்டாகலாம். காமஞ்சாலா இளமையோளையும் நாடிப் பின்செல்லும் நீ, மடமையுற்றாய் என்றதாம்.

மேற்கோள்: காமக்கிழத்தி நலத்தினைப் பாராட்டிய தீமையில் முடிக்கும் பொருளின்கண் தலைவிக்குக் கூற்று நிகழும்.