பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

211


கருத்து: 'அவள் உறவை மறைப்பதேன்?" என்றதாம்.

விளக்கம் : திரை மணற்பாவையை அழித்தற்கே வருந்தி உண்கண் சிவப்ப அழுதவள், நீ அவள் வாழ்வையே அழிக்க முயலின் என்னாகுவளோ? என்பது தோழி கூற்றாகும்.

பரத்தை கூற்றாயின், 'காமவுறவுக்குப் பொருந்தாத அத்தகு இளையோளையோ நீயும் விரும்பினை' என்றதாகக் கொள்க.

126. திரை மூழ்குவோள்!

கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே?
உண்கண் வண்டினம் மாய்ப்பத்

தெண்கடற் பெருந்திரை மூழ்கு வோளே!

தெளிவுரை: கொண்கனே! மைதீற்றிய தன் கண்களிலே வண்டினம் மலரென மயங்கிவந்து மொய்க்கவும், அதனைப் பொறாதே, தெளிந்த கடலின் பெரிய அலையிடையே மூழ்குவோளான. நின் உறவாட்டியை, யாமும் கண்டேம் அல்லமோ!

கருத்து: "அவள் நிலைதான் இனி என்னாகுமோ?" என்றதாம்.

சொற்பொருள்: உண்கவி - மையுண்ட கண். நீலமலர் போலத் தோற்றலால் வண்டு மொய்ப்பவாயின. இது அவளது கண்ணெழில் வியந்ததும், முதிரா இளமைச் செவ்வி சுட்டிக் கூறியதுமாம். "வண்டு மொய்ப்பத் திரை மூழ்குவோள், துயர் எழின் உயிர் வாழாள்" என்றதாம்.

127. மாலை விலக்குவாள்!

கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே?
தும்பை மாலை இளமுலை

நுண்பூண் ஆகம் விலங்கு வோளே!

தெளிவுரை: கொண்கனே! தும்பை மாலையணிந்ததும், இளமுலைகள் பொருந்தியதும், நுண்ணிய பூண் அணிந்ததுமாகிய தன் மார்பினை. நீ தழுவாவகையிலே விலக்கிச் செல்வோளான, நின் உரிமையாட்டியை, யாமும் கண்டேம் அல்லமோ!