பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

ஐங்குறுநூறு தெளிவுரை


அவர்கள் கொண்டது. இகற்கேற்பவே அவர்கள் விரிவான பொருளையும் இயைபுபடுத்திக் கூறுவார்கள்.

வெள்ளாங்குருகின் பிள்ளையே போலும் என்று காணச் சென்ற மடநட நாரை' என்று நேராகவே பொருள் கண்டு இத்தெளிவுரையானது செல்லுகின்றது.

தலைவன் ஊர்த்தலைவன் என்னும் பெருநிலையினன் ஆதலின், அவன் உறவாலே அடையும் பயன்களை நாடும் பரத்தையர், அவனை எவ்வாறும் தமக்கு வசமாக்க முயல்கின்றனர். அவன் கலையார்வம் மிகுந்தவனாதலின், பாணன் ஒருவனும் அவனோடு பழகிவருகின்றான். அவன் பரத்தையர் குடியிற் பிறந்தவனே. அவனும், தலைவனின் பரத்தமை உறவாலே தானும் பயனடையலாம் என்று நினைத்து வருகின்றவனே?

ஊர் விழாக்களிலும், காடவாடு விழாக்களிலும் பரத்தையர்கள் ஆடியும் பாடியும் மக்களை மகிழ்விப்பர். ஊர்த்தலைவன் என்ற முறையில், தலைவனும் அவ் விழாக்களில் அவர்களோடு கலந்து கொள்வான். அவ்வேளையிலே இளையாள் ஒருத்தியைச் சுட்டிக் காட்டி, அவள் தன் உறவினள் எனவும், தலைவனை அடைவதையே நாடி நோற்பவள் எனவும் அறிமுகப் படுத்துகின்றான் பாணன்.

பின்னொரு சமயம், தலைவனின் இன்பநுகர்ச்சியார்வம் அடங்காமல் மேலழெவும், அவன் மனம் பரத்தையர் உறவை நாடுகின்றது. அவ்வேளை பாணன் காட்டிய பெண்ணின் நினையும் மேலெழுகின்றது. அவளைப் பாணன் உதவியோடு காணச் செல்லுகின்றான். சேரிப்பெண்டிர் பலர் அவனைக் கவர்கின்றனர். ஒருவரை மாற்றி ஒருவர் என்ற நிலையில் அவன் தாவிக்கொண்டிருக்கின்றான்.

இந்நிலையில், முன் நுகர்ந்து கைவிட்ட ஒருத்தியின் நினைவு ஒரு நாள் மிகுதியாக, அவளிடம் வாயில்களை அனுப்புகின்றான். இவன் செயல் ஊரே பழிப்பதாகின்றது.

மீண்டும் தலைவியை நாடுகின்ற மனமும் ஏற்படுகின்றது. அவளும் அவள் தோழியும், அவன் உறவை ஏற்க மறுத்து வெறுத்து உரைப்பதாக அமைந்த செய்யுட்கள் இவை எனலாம்.