பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

கத்துறையின் ஐந்திணை ஒழுக்கங்களுள், மருதம்பற்றிய செய்யுள்கள் நூறும் இத்தொகை நூலிலே முதற்கண் வைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறு ஒரு திணைச் செய்யுட்களே தொடர்ந்துவர அமைந்த மற்றொரு தொகைநூல் கலித்தொகை. அதன்கண் 'பாலைக்கலி' முதலாவதாக அமைந்துள்ளது. தனித்திணைபற்றிய முல்லைப்பாட்டும், குறிஞ்சிப்பாட்டும், பட்டினப்பாலையும் பத்துப்பாட்டுள் அமைந்த தனிநெடும் பாட்டுகள் ஆகும்.

ஒரு திணைபற்றி, ஒரே சான்றோர் செய்த செய்யுட்கள் பல தொடர்ந்து வருவதனால், அத்திணைபற்றிய கருத்துத் தெளிவையும், அப் புலவரின் புலமை ஆற்றலையும் புலமை ஆற்றலையும் உணர்தற்குரிய நல்வாய்ப்பு, கலியாலும், இந்நூலாலும் நமக்குக் கிடைக்கின்றது.

ஒவ்வொரு திணைக்கும் நூறு நூறு எனவும், அவற்றைப் பத்துப் பத்துச் செய்யுள்களாகத் தனித்தனித் தலைப்பின்கீழும் அமைத்துள்ள அமைப்புமுறை, எண் வரையறைப்படுத்து அதன்பால் முதன்மை நோக்கோடு நூலமைக்கும் ஒரு மரபினைத் தமிழாசிரியன்மார் மேற்கொண்டிருந்ததனையும் காட்டுவதாகும். 'பதிற்றுப்பத்தும்' இவ்வாறு எண்முறைமை பேணிய வழக்கில் அமைந்ததே. திருக்குறளும் 'பத்துப்பா' எண் மரபையே போற்றுகின்றது. பிற்காலத்தார் நூறு நூறு செய்யுட்களாக எண்ணெல்லை வகுத்துப் பாடிய சதக நூல் களுக்கும், தேவாரம், பிரபந்தம் ஆகியவைகட்கும் இந்நூலமைப்பே முன்னோடியாக வழிகாட்டி இருக்கலாம்.

’வேந்தன் மேய தீம்புனல் உலகம்' என்னும் மருதம், பல்பொருள் வளமையால் பெருக்கமுற்றிருந்தது போன்றே