பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

241


போல மணல்மேட்டிற் குவிந்து கிடக்கும் என்பது, அதன் துயர் மிகுதி கூறியதாம். கேண்மை - கேளாம் தன்மை; உறவாகும் உரிமை.

உள்ளுறை: 'நாரை உளர வொழிந்த தூவி போர்வில் பெறூஉம் துறைவன்' என்றது, பரத்தைபால் அருளோடு சென்ற தலைவன், அவள் மையலிலே சிக்கி வாரியிறைத்த பொன்னும் பொருளும் அளவில் என்பதாம்.

குறிப்பு : 'நாணுமோ மற்றே' எனவும் பாடம்.

154. இவ்வூரே பொய்க்கும்!

துறை : தோழி வாயில்வேண்டி நெருங்கிய வழி, வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது.

[து. வி.: பரத்தையிற் பிரிந்து வந்தானை, நின்பால் வரவிடுக என்று தலைவியிடம் சொல்லுகின்றாள் தோழி. 'அவனை வரவிடேன்' என்று மறுக்கும் தலைவி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
கானற் சேக்கும் துறைவனோடு

யான்எவன் செய்கோ? பொய்க்கும் இவ் ஊரே?

தெளிவுரை: 'வெள்ளாங் குருகின் பிள்ளையோ' எனக் கருதிக் காணச்சென்ற மடநடை நாரையானது, கானலிடத்தே தங்கியிருக்கும் துறைவனோடு, யான் என்னதான் செய்வேனோ? இவ் ஊரும் அவனைக் குறித்துப் பொய்த்துப் பேசுகின்றதே!

கருத்து: ’அவன்பால் எவ்வாறு மனம் பொருந்துவேன்' என்றதாம்.

சொற்பொருள்: கானல் கானற் சோலை. சேக்கும் - தங்கும். பொய்க்கும் - பொய்யாகப் பலவும் கூறும்.

விளக்கம் : யால் எவன் செய்கோ பொய்க்கும் இவ்வூரே' என்றது. இவ்வூரனைத்தும் கூடிப் பொய் சொல்லுமோ? அதனை நம்பி நோவாதே யானும் யாது செய்வேனோ? அத்தகையானிடத்தே என் மனமும் இனிச் செல்லுமோ? என்பதாம்.

ஐங். -- 16