பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

247


சொற்பொருள்: கண்டிகும் - கண்டோம். அம் மாமேனி - அழகிய மாமை நிறம் அமைந்த மேனி. கொட்கும் - திரியும்.

விளக்கம் : வெள்ளாங் குருகின் பிள்ளையோ என்று போன நாரை, அதை மறந்து துணையோடு திரியும் கானலம் துறைவன் என்றனள், அவன் புதல்வனிடத்தும் அன்பற்றவனாகிப் பரத்தை மயக்கிலேயே திரிவானாயினன் என்றற்கு துறைவன் கண்டிகும் என்பது எள்ளி நகையாடிக் கூறியதாம். அம் மாமேனி எம் தோழியது துயருக்கே காரணமாயின இவன், அது தீர்க்கும் உணர்வோடு வாரானாய்த், தன் பரத்தையின் புலவி தீர்க்கக் கருதி இல்லந்திரும்புவான்போல வருகின்றான் என்று, தான் அறிந்ததை உட்கொண்டு கூறியதாம்.

கண்டிகும் அம் மாமேனி எம் தோழியது துயரே' என்றது. நின் பரத்தையின் பிரிவுத்துயரையும் யான் கண்டேன் ஆதலின், நீதான் அவள்பாற் சென்று அவள் புலவி தீர்த்து இன்புறுத்துவாயாக என்று மறுத்துப் போக்கியதுமாம்.

உள்ளுறை : பிள்ளை காணச் சென்ற நாரை, அதனை மறந்து தன் துணையொடு சுற்றித் திரியும் கானலம் பெருந்துறைத் துறைவன் என்றது, அவனும், தன் புதல்வனைக் காணும் ஆர்வத்தனாகக் காட்டியபடி இல்லம் வந்து. தலைவியுடன் இன்புற்றிருத்தலை நாடியவனாயுள்ளான் என்றதாம்.

மேற்கோள்: தண்ணம் துறைவன் என்பது விரிக்கும் வழி விரித்தல் எனக் காட்டுவர் இளம்பூரணரும் சேனாவரையரும் (தொல். எச்ச: 7).

<X-larger|159. நலன் தந்து போவாய்!}} துறை: மறாமற்பொருட்டு, உண்டிக் காலத்து வாயில் வேண்டி வந்த தலைமகற்குத் தோழி கூறியது.

[து. வி. உணவு நேரத்திற்கு வீடு சென்றால், தலைவி தன்னை மறுத்துப் போகுமாறு சொல்லமாட்டாள் என்று, அவள் குடும்பப்பாங்கினை நன்கறிந்த தலைவன், அந்த நேரமாக வீட்டிற்கு வருகின்றான். அப்படி வந்தவளைத் தோழி கண்டு உரைப்பதாக அமைந்த செய்யுள் இது.]