பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

271


அதனால் பெரிதும் வருத்தமுற்றனன் தலைமகன். அவளும் தோழியும் ஒருங்கே நின்றபோது, அவ்விடம் சென்று, தோழிக்குச் சொல்வான்போல அவன் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித்
தண்கமழ் புதுமலர் நாறும் ஒண்தொடி,
ஐதமைந் தகன்ற அல்குல்,
கொய்தளிர் மேனி! - கூறுமதி தவறே.

தெளிவுரை: தொண்டியின் குளிர்ந்த மணம்கமழுகின்ற புதுமலரைப்போல மணம் கமழகின்றவளே! ஒளியமைந்த கொடியினையும், அழகிதாக அமைந்தும் அகன்றும் விளங்கும் அல்குல்தடத்தினையும் கொண்டவளே! கொய்யத் தூண்டும் மென்தளிரைப் போன்ற மேனிக்கவினையும் பெற்றவளே! எனக்குரிய பண்புகளையும், என் உறக்கத்தையும், நின் தோழி கவர்ந்து கொண்டாளே! அதற்கு, யான் செய்த தவறுதான் யாதெனக் கூறுவாயாக!

கருத்து: 'இவளின் இந்தச் சினம் எதன் பொருட்டோ?' என்றதாம்.

சொற்பொருள்: பண்பு - உள்ள உரனும் பிறவும். ஐது - அழகிதாக. பாயல் - உறக்கம். 'புதுமலர்’ என்றது, நெய்தல் மலரை. நாறும் - மணம் கமழும்; அவர் நெய்தற் புதுமலரினைக் கொய்து கூந்தலில் அணிந்திருந்த வனப்பை வியந்து கூறியது. கொய் தளிர் மேனி - கொயத் தூண்டும் வனப்புடைய மாந்தளிர் போன்ற மேனி; அவ்வாறே கண்டார் அடையக் காமுறும் மேனி என்றதுமாம். கூறுமதி - கூறுவாயாக.

விளக்கம் : 'தண்கமழ் புதுமலர் நாறும், ஐதமைந்தகன்ற அல்குல் கொய்தளிர்மேனி, ஒண்தொடி, பண்பும் பாயலும் கொண்டனள்' எனத் தலைவியோடு பொருத்தியும் பொருள் உரைக்கலாம். 'இத்துணை நலமுடையாள் அத்தகு கொடுமைசெய்ய யான் செய்த தவறுதான யாதோ?" என்று கேட்பதாக அப்போது கொள்க. மதியுடம்படுத்தல் வேண்டித் தோழியைக் குறையுறுகின்றவன் தலைவனாகவே, அவளையே போற்றியதாக இவ்வாறு கொள்ளலும் தவறாகாது.

தன்னை நலிவித்துப் பாயலும் இழக்கும்படி பிரிவு நோய்க்கு உட்படுத்தினான் என்று ஊடிய தலைவியைக் குறித்து, "அவள்