பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

277


விலேயே வரைதல் வேண்டும்' எனச் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இது.]

சிறுநணி வரைந்தனை கொண்மோ பெருநீர்
வலைவர் தந்த கொழுமீன் வல்சிப்
பறைதபு முதுகுருகு இருக்கும்

துறைகெழு தொண்டி அன்னவிவள் நலனே!

தெளிவுரை :. கடலிடத்தே வலைவீசிப் பரதவர் பற்றிக் கொணர்ந்த கொழுமையான மீனுணவின் பொருட்டாக, பறத்தலைத் தன் முதுமையினாலே கைவிட்ட கிழக்குருகானது சென்று தங்கியிருக்கும், துறை பொருந்தியது தொண்டி, அதனைப் போன்ற இவளது நலத்தினை, நீயும் மிகக்குறுகிய காலத்துக்குள்ளேயே, நினக்கு உரியதாக்கிக் கொள்வாயாக!

கருத்து: 'மிக விரைவிலேயே மணங் கொள்க' என்றதாம்.

சொற்பொருள்: சிறுநணி - மிக விரைவிலே; சிறுநனி என்பதும் பாடம். பெருநீர் - கடல். வலைவர் - வலையினாலே வளம்கொள்ளும் மீனவர்; 'வலைஞர்' என இன்றும் விளங்குவர். வல்சி - உணவு. பறைதபு - பறத்தலை விட்ட. இருக்கும் - எதிர்பார்த்தபடி தங்கியிருக்கும். நலன் - அழகு.

விளக்கம்: வலைவர் தம் பெருமுயற்சியாலே கொணர்ந்து போடும் மீன்களைத், தன் உணவுக்காகக் கவர்ந்துகொள்ளப் பறத்தற்கு இயலாதாய்க் கிழடுபட்டுப்போன குருகு சென்று காத்திருக்கும் துறைக்காட்சியைக் காட்டிக்கூறி, அவ்வாறே நின் காதன்மையாலே உரிமைகொண்ட இவள் நலனை, வேற்றார் வரைந்துவந்து பெறுதற்குக் காத்திருக்கின்றனர் என்கின்றாள். அப்படிக் கேட்டு வருவோர் முதுசான்றோர் எனவே, முதுகுருகைக் கூறினள். 'முதுகுருகும் வலைவர் தரும் மீனுண்டு பசியாறும் துறையினன்' என்றது, எவரும் துன்பத் தீர்ந்து இன்புறுதற்கு அருள்பவன் தலைவன் என்று, அவன் அருளுதற் பெருமை சுட்டிப் புகழ்ந்ததுமாம்.

உள்ளுறை : 'வலைவர் தந்த கொழுமீன் வல்சிக்கண்ணே பறத்தல் கெட்ட முதுகுருகு இருக்கும்' என்றது, வேற்றுவரவு வேட்டு முதியோர் வருதற்குரியர் என்றதாம்.

குறிப்பு : வேற்றார் வரவு நேராமுன் மிகவிரைவில் நீயே வந்து வரைந்து கொள்க என்கின்றாள். 'சிறுநனி வரைந்தனை