பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

ஐங்குறுநூறு தெளிவுரை


தெளிவுரை : நெய்தலேபோல விளங்கும் மையுண்ட கண்ளையும், நேரிய முன்னங்கையோடு விளங்கும் பணைத்த தோள்களையும் உடையவரான, பொய்த்தலையே அறியாதாரான சிறு மகளிர்கள். தாம் பொய்தல் விளையாட்டயர்ந்த வெண்மணல் மேட்டினிடத்தே, கடல்தெய்வத்தை வேண்டிக் குரவையாடு தலையும் மேற்கொள்ளுகின்ற, துறைபொருந்தியவன் தலைவன். அவன், நீ சொன்னவாறே அருள்வானாயின், அவராகிய ஆரவார முடைய இவ்வூரும், நாம் தங்குவதற்கு இனிதாயிருக்குமே!

கருத்து: 'இன்றேல், இவ்வூரும் வருத்தம் செய்வதாகும்' என்றதாம்.

சொற்பொருள்: இறை - முன்னங்கை. பொய்தல் - சிறு மகளிர் கூடியாடும் ஆடல்வகை. குரவை - தெய்வம் வேண்டி எழுவர் மகளிர் கைகோத்து ஆடும் ஒருவகை ஆடல் வகை; குன்றக் குரவை, ஆய்ச்சியர் குரவை போல்வது; குரவையிட்டு மகளிர் வாழ்த்துதலை இன்றும் திருமணம் போன்ற விழாக்களில் காணலாம்.

விளக்கம்: களவு உறவே பொய்த்தற்குத் தூண்டும் என்பது உண்மையாதலால், இவரை அதனைக் கொள்ளாத நிலையும் பருவமும் உடையவரெனச் சுட்டவே 'பொய்யாமகளிர்' என்றனர். ஒளித்துப் பிடித்து விளையாடும் சிறுமியர் விளையாட்டெனவும், கண்ணைக் கட்டிக்கொண்டு குறித்தாரைப்பற்றி யாடும் ஆட்டமெனவும் இதனைக் கருதலாம். பொய்கைக்கண் மூழ்கிப் பிடித்து விளையாடும் நீர் விளையாட்டும் ஆகலாம். 'பொய்தல் மகளிர் விழவணிக் கூட்டும்' என்பது அகம் (26); ஆடவராகிய சிறுவரும் ஆடுதலைப் பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்' என்று நற்றிணை காட்டும் (-166) இவரை, 'மறையெனல் அறியா மாயமில் ஆயம்' என்றும் இதே கருத்தில் அகம் காட்டும் (20). இச் சிறுமகளிர் குரவை யயர்வது தமக்கு நல்ல வாழ்வைத் தந்தருள நீர்த் தெய்வத்தை வேண்டியென்க.

'அழுங்கலூர்' என்றது, தான் பிறந்து வளர்ந்த ஊரையே, தன் களவுக்கற்பை அலர்கூறித் தூற்றுதலால் வெறுத்துக் கூறியதாம். 'கொண்கன் நல்கின்" அலர் அடங்கி ஊரவர் உவந்து வாழ்த்தல் மிகுதலின், 'உறைவு இனிது' என்கின்றனள்.

உள்ளுறை: 'பொய்கலாகிய பொய்யா மகளிர் குப்பை வெண்மணற் குரவை நிறூஉம் துறை' என்றது. அவர் பலரும்