பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

285


ஏற்றலே செயத்தக்கது' என்று பணிந்து வேண்ட, அவன் புறத்தொழுக்கத்தாலே புண்பட்டிருந்தவள், அவரை மறுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி
மீனுண் குருகிளங் கானல் அல்கும்
கடலணிந் தன்றவர் ஊரே

கடலினும் பெரிதெமக் கவருடை நட்பே!

தெளிவுரை : நெய்தலிடத்தேயான பெரிய கழிப்பாங்கிலேயுள்ள நெய்தற்பூக்களை நீக்கிவிட்டு, அவ்விடத்தேயுள்ள மீன்களைப் பற்றியே தான் விரும்பி உண்ணும் குருகானது. அயலதான இளங்கானலிடத்தேயும் சென்று தங்கும். அத்தகு கடலால் அழகுபெற்றது அவருடைய ஊராகும். எமக்கு அவருடைய நட்பானது, அந்தக் கடலினும் காட்டிற் பெரிதாகுமே!

கருத்து: 'அந் நட்பை அவர்தாம் பேணுதல் மறந்தாரே' என்றதாம்.

சொற்பொருள்: இளங்கானல் - கடற்கரை அணுக்கத்துக் கானற்சோலை; நீரற்ற கானல் போலாது, வெண்மணற் பரப்பானது மிகுகடல் நீரின் அருகேயிருந்தும், கானலாகிக் கிடப்பது என்று அறிக. கடல் அணிந்தன்று - கடலாலே அழகடைந்திருப்பது.

விளக்கம்: 'அவருடை நட்பு எமக்குக் கடலினும் பெரிது' என்றது. தன்னளவிலே அதுவே உண்மையாயினும், தன்னை மறந்து பரத்தையின்பத்திலே ஈடுபட்டு வாழும் தலைவனளவிலே அது ஏதுமற்றதாய்ப் பொய்யாயிற்று; அவன் அன்பிலன், அறம் இலன், பண்பு இலன் என்றனளாம். 'குருகினம் கானல் அல்கும்' என்ற பாடம் கொண்டு, குருகினங்கள் கானலிடத்தே சென்று தங்கும் எனவும் பொருள் காணலாம். 'நெய்தல் இருங்கழி' - நெய்தற பூக்களை மிகுதியாகக் கொண்ட இருங்கழி எனலும் ஆம்; இருங்கழி - கரும் கழி.

'அவருடைய நட்பு எமக்குக் கடலினும் பெரிது' என்றது, அவருக்கு அஃது பெரிதாகப் படவில்லையே என்று நொந்ததாம். அவர் வெறுத்து ஒதுக்கினும், மனையறக் கடமையினமாகியயாம். அவரை ஒதுக்குதலைக் கருதாதே என்றும் ஏற்கும்