பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

ஐங்குறுநூறு தெளிவுரை


குங்கூட இட்டுப் புனையமாட்டார்களே! உடற்கு அகமாக அணிவோர் யாரும் இங்கே இல்லாமையினாலே, தொடலை தொடுத்து விலைப்படுத்துவோரும், இதனிற் சிலபூக்களே கொண்டு தம் மாலைகளைத் தொடுப்பர். ஆகவே, இஃது எமக்கும் வேண்டாம். இதனைப் பெறின், இதனைப் பெறின், இல்லத்தாரும் பிறரும் ஐயுறற்கு இடனாகும்! . கருத்து: 'இதனைக் கொள்வேன் அல்லேன்' என்றதாம்.

சொற்பொருள்: நொதுமலாளர் - அயலார். 'இவை’ என்றது அவன் தந்த நெய்தல் தழையாலான கையுறைகளை. பகைத்தழை - ஒன்றினொன்று வண்ணத்தால் மாறுபட்டுத் தொடுத்த தழை. உடலகம் - உடலிடத்தே. தொடலை - மாலை தொடுத்துக்காட்டுவது தொடலை ஆயிற்று; உடலைத் தொட்டுக் கிடப்பது எனவும் கொள்க.

விளக்கம்: நெய்தலே மிகுதியாகத் தேடித் தொடுத்த தழைகளை, நெய்தன் மகளிர் விரும்பி அணியார் என்பதும் இதனால் அறியப்படும். நீலமணி போலும் நெய்தலை இடையிடைப் பிறவற்றுடன் வைத்துத் தொடுப்பதே அழகுடைத்தென்பதனை, 'நெய்தல் அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇ' எனப் பிறரும் கூறுதலால் அறியலாம் - (நற். 96). அயலாரும் கொள்ளார்; எம்மவரோ தம் பாவைக்கும் புனையார்'; எனவே, இதனை வேற்றான் தரப் பெற்றதாக அலர் எழுதலே இயல்பு; ஆகவே இஃது வேண்டா என்றனள். 'பாவை புனையார்' என்றது, அவர்தம் விளையாடற் பருவத்தை நினைப்பித்துக் கூறியதாம். 'அணிதல் இயல்பல்லாத ஒன்றை அணியும் அது ஐயுறவுக்கு இடனாகும்' என்று தழையுடை மறுத்தனள்; அவ்வாறே அவன் உறவும் பொருந்தாமை காட்டி மறுத்தனளாம்.

மேற்கோள்: 'தோழி கையுறை மறுத்தது' என்பர் நச்சினார்க்கினியர் - (தொல். களவு. 23).

188. தகை பெரிய கண்!

துறை: விருந்து வாயிலாகப் புகுந்த தலைமகன், தலைவி இல்வாழ்க்கைச் சிறப்புக்கண்டு மகிழ்ந்து சொல்லியது.

[து. வி.: தன் புறத்தொழுக்கம் காரணமாகத் தலைவி தன்னை வெறுத்து ஒதுக்கியிருப்பாள்' என்று கருதினான் தலை