பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

35


தன்கண் தோன்றிய இசைமை பொருளாகப் பிறந்த பெருமிதம்' என்னும் மெய்ப்பாட்டினைப் புலப்படுத்துவன; பிரிவுத் துயரினை ஆற்றியிருந்த தலைவியின் பெருந்தகுதிப்பாட்டை, குலமகளிரின் நிறைவான மாண்பினைக் கூறுதலான பயனைக் காட்டுவன எனலாம். இல்லவள் மாண்பானால்' என வள்ளுவர் கூறும் பெருமாண்பும் இதுவேயாம்.


6. வேந்து பகை தணிக !

துறை : களவிற் பலநாள் ஒழுகிவந்து, வரைந்து கொண்ட தலைமகன், தோழியோடு சொல்லாடி, "யான் வரையாது ஒழுகுகின்ற நாள், 'நீயிர் இங்கு இழைத்திருந்த திறம் யாது?" என்றாற்கு, அவள் சொல்லியது.

[து. வி.: விரைவிடை வைத்துப் பிரிந்து சென்றவன், திரும்பிவந்து முறையாகத் தலைவியை வரைந்து, அவளோடே மணமும் கொண்டு, அத் தலைமகளோடே இல்லறமும் பேணி இன்புற்றிருக்கின்றனன். அதுகாலை, அவன் தோழியிடம், தான் வரையாது காலம் நீட்டித்த அந்தப் பிரிவுக்காலத்தே, அவர்கள் எவ்வாறு நினைந்திருந்தனர் என்பதுபற்றிக் கேட்க, அவள் அவனுக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது. வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தே கொள்ளும் தலைவியின் பிரிவுத் துயரம் குறிஞ்சித் திணையின்பாற் படுவது; எனினும், இது இல்லறமாற்றும் காலத்தே உசாவிக் கேட்கச் சொன்னதான கற்பறக் காலத்ததாதலின் மருதத்திணையிற் கொளற்கும் உரித்தாயிற்று என்க; மருதக் கருப்பொருள் பயின்று வருதலையும் நினைக்க.]

வாழி ஆதன் ; வாழி அவினி!
வேந்து பகை தணிக; யாண்டு பல நந்துக!
என வேட்டோளே, யாயே; யாமே,
'மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்
தண்துறை யூான் வரைக

எந்தையும் கொடுக்க' என வேட்டேமே!

தெளிவுரை : 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! வேந்தன் பகை தணிவானாக; இன்னும் பல ஆண்டுகள் நலனோடு வாழ்வானாக' என விரும்பி வேண்டினள் தலைமகள். யாமோ ’அகன்ற பொய்கையிடத்தே, தாமரையின் முகைகளும்