பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



44

ஐங்குறுநூறு தெளிவுரை


உள்ளுறை: மனை நடு வயலைக் கொடியானது, தான் சுற்றிப்படர்தற்கு வாய்ப்பான உறுதியான பந்தர் அருகேயே இருந்தம். அதனைவிட்டு மனைப்புறத்தே படர்ந்து சென்று, உள்ளீடும் வலிமையும் அற்ற வேழத்தைப் பற்றிச் சுற்றுவது போல, தலைவனும், தலைவி தன் மனைக்கண் தன் அருகேயே பெருமையும் பெண்மையும் ஒளிவீசும்படி இருக்கவும், அவளைக் கைவிட்டுப் புறத்தேயுள்ள சேரியிடத்துப் புல்லிய பரத்தையரை நாடிப் போவானாயினான் என்பதாம்.

மேற்கோள் : கற்பின்கண் தலைவனை நீங்கி, மிகத்தனிமையுற்று அலமரல் பெருகிய காம மிகுதியின்கண், தலைவிக்குக் கூற்று நிகழ்தற்கு இளம்பூரணரும் (தொல்-கற்பு); இதனுள் முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றும் கூறலின் நாடக வழக்கும், தலைவனைத் தலைவி கொடுமைகூறல் உலகியலாதலின் உலகியல் வழக்கும் உடன் கூறிற்று' என நச்சினார்க்கினியரும் (தொல். அகத். 53) எடுத்துக் காட்டுவர். முதற்பொருள் - மருதம்; கருப்பொருள் - வேழமும் வயலையும்; உரிப்பொருள் - வாயில் நேர்தல்.

12. ஆற்றுக தோற்க !

துறை : உழையர் நெருங்கிக் கூறிய திறமும், தனது ஆற்றுமையும் நினைந்து, வாயில் நேரக் கருதிய தலைமகள். ’பரததையர்க்குப் பின்பும் அவன் சிறப்புச்செய்தான்' என்பது கேட்டுப், பொருளாய்க் கருத்தழிந்து, தன்னுள்ளேயே சொல்லியது.


[து. வி: அவன் தனக்காற்றிய கொடுமைகளை மறந்து, அவனை மீண்டும்ஏற்று உறவாடத் துணிந்தனள் தலைவி. அவ்வேளையிலே, அவன் மீணடும் பரத்தையரை நாடினான் எனக் கேட்டு, அதனால் மனம் மிகவும் வெதும்பித் தன்னுள்ளேயே வருந்திச் சொல்லியதாக அமைந்தது இது.]

கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும்
துறைகேழ் ஊரன் கொடுமை நன்றும்
ஆற்றுக தில்ல, யாமே;
தோற்க தில்ல, என் தடமென் தோளே!

தெளிவுரை : கரையோரத்தே பொருந்தியிருக்கும் வேழமானது. வயல்கத்தேயுள்ள கரும்பினைப் போலவே வெண்