பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



46

ஐங்குறுநூறு தெளிவுரை


இன்பம் கோடற்கு உரியர் என்றமையின் அவை கூறினாள் என்பது' என்று கூறி, எடுத்துக் காட்டுவர் பேராசிரியர் (தொல். உவம. 25). ஆகவே, இதனை பயவுவமப் போலி என்பர் அவர்.

13. யாமத்தும் துயிலறியார் !

துறை: வாயிலாப் புக்கார்க்குத், தலைமகள். 'அவன் பெண்டிர் நள்ளென் யாமத்தும் துயிலார்; அவர் அறியாமல் அவன் வரும் திறம் யாது?' எனச் சொல்லி, வாயில் மறுத்தது.

[து. வி : வாயில் வேண்டி வந்தார்க்கு. அவன் மனம் தெளிந்திலன்; பரத்தையர் வீடே கதியாகத் துயில்பவன் எனக் கூறி, வாயில் மறுத்தது இதுவாகும்.]

பரியுடை நன்மான் பொங்குளை அன்ன
அடைகரை வேழம் வெண்பூப் பகரும்
தண்துறை ஊரன் பெண்டிர்.
துஞ்சு ஊர் யாமத்தும், துயிலறி யலரே!

தெளிவுரை : விரைந்த செலவினையுடைய நல்ல குதிரை தலைக்கணிந்த வெண்ணிறக் கவரியைப்போல, அடைகரைக்கண்ணே படர்ந்துள்ள வேழமானது வெண்ணிறப் பூக்களைக் கொடுத்திருக்கும், தண்ணிய நீர்த் துறையினைக் கொண்ட ஊரன் தலைவன். அத் தலைவனின் பெண்டிர், ஊரே அயர்ந்து துயிலும் இரவின் நடுயாமத்தினும், தாம் மட்டும் துயிலினை அறியாரா யிருப்பரே!

கருத்து: ஆகவே, அவரைப் பிரிந்து அவன் எம்பால் மீள்வான என்பதும், எமமோடு அன்புடன் கூடிவாழ்வான் என்பதும். இனி நடக்காததொன்றாம் என்று சொல்லி வாயில் மறுத்தனள் என்க.

சொற்பொருள்: பரி - குதிரைச் செலவு: பொங்கு உளை - பொங்கிக் கிடந்து நெற்றியிற் புரளும் தலைக்கு அணி. அடைகரை - அடையும் கரை: இரு பெயர் ஒட்டுப் பண்புத்தொகை. பகரும் - ஒத்தலர்ந்து பிறரைக் கவர்ந்து அழைத்திருக்கும். பெண்டிர் - பரத்தையர் : இழிவாகச் சுட்டியது. அவன் பெண்டிர் - அவனோடும் உறவுடையரான பரத்தையர்; இவர் பலராக, இவன் ஒரு வீட்டில் இருப்பப் பிறர் துஞ்சாராவர்