பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐங்குறுநூறு தெளிவுரை

உலகெனத் தோன்றிப்பல் ஊழிகள் சென்றபின்
நிலவுயிர் பலவினுள் நிமிர்ந்தனன் மனிதன்!

அறிவெனுஞ் சுடரரும் பிடவவன் உள்ளே
தெரிதெரி எனமனத் தூண்டல்பின் சேர்ந்ததே!

ஏனெனக் கேட்டவன் எதையுமே நோக்கவும்
தானெனத் தனக்கெனத் தரணியிற் காணவும்
அதுவிருப் பிதுவெறுப் பெனக்காண் போக்குடன்
இதுநன் றிதுதீ தெனக்காண் தெளிவும்
தானுறு துன்புடன் இன்பமும் ஏனோர்
தாமுறல் இயல்பெனத் தான்நினை தகையும்
இனும்பல் குணமும் எய்தினன் மிகவே!

எணங்கள் சுழித்தெழுந் தோங்கிடப் பிறர்க்கும்
எணமுணர்த் திடவவன் இதயத் தெண்ணவே
எழுந்தன குரல்களும் எண்ணிலா வகையால்
எழுந்தது அகரமும் எழுந்தன எழுத்தெலாம்!

உயிரொடு மெய்யும் உயிர்மெயும் தோன்றி
மயலறு சொல்வளம் பொருளொடே மலரப்
பிறந்தது பேச்சே அதுதமிழ் ஆகும்!
சிறந்தது அத்தமிழ் சிறந்தனன் தமிழன்!

அத்தமிழ் அறவோர் அறிந்தறிந் தேத்திட
முத்தமிழ் எனச்சொல் நலம்முகிழ்த் ததுவே!

இலக்கிய இலக்கண இசைவளம் பெற்றே
கலக்கமில் ஞானக் கதிரொளி யானதே!
இத்தமிழ் நாட்டினில் இருந்தர சாண்டோர்
முத்தமிழ் ஆட்சியால் முழுநலம் கண்டோர்
அத்தமிழ் என்றும் நின்றே சிறந்திடுங்