பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



50

ஐங்குறுநூறு தெளிவுரை


தலைமகன் இவ்வாறு பரத்தையரோடு சேர்ந்து புனலாடிக் களித்தலைக் காட்டும்.

உள்ளுறை : வேழப்புணையானது புனலாடும் மகளிர்க்குப் பற்றும் துணையாகி விளங்குதலே போலத் தலைவனும் பற்றும் துணையாகி ஒழுகுதலால், அவன் அவர்பாற் செல்லும் மனத்தினனன்றி, நம்பாற் கலந்த உளத்தன் ஆகாமையின் 'ஊரன் அல்லன்' என்கின்றாள்.

16. கண் பொன் போர்த்தன!

துறை : வாயிலாய்ப் புகுந்தார்க்குத் தோழி, 'அவன் வரவையே நினைத்து இவள் கண்ணும் பசந்தன; இனி அவன் வந்து பெறுவது என்ன?’ எனச் சொல்லி, வாயில் மறுத்தது.

[து.வி. : 'அவனை நினைந்து நினைந்தும், அவன் வரவை நோக்கிநோக்கியும் சோர்ந்து தளர்ந்ததனால், இவள் கண்களும் பண்டை ஒளியற்றுப் பொன்னிறப்பசலை படர்ந்தன; இனி அவன் வந்துதான் இவள் பெறுவது என்னவோ?' எனக் கூறி மறுத்துரைத்தது இது.]

ஓங்குயூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால்
சிறுதொழு மகளிர் அஞ்சனம் பெய்யும்
பூக்கஞல் ஊரனை யுள்ளிப்

பூப்போல் உண்கண் பொன்போர்த் தனவே.

தெளிவுரை : 'ஓங்கி உயர்ந்தெழுந்த பூவையுடைய வேழத்தின், துளையுடைய திரண்ட தண்டினிடத்தே, சிறுமியரான ஏவல் மகளிர்கள், தம் கண்ணுக்கு இடுதற்குரிய அஞ்சனத்தைப் பெய்து வைப்பர். அத்தன்மையுடைய பூக்கள் நிரிம்பிய ஊரனையே நினைதலால், இவளுடைய குவளைப்பூப் போலும் மையுண்ட கருங்கண்களும், பொன்னிறப் பசலையினைப் போர்த்தவை ஆயினவே!

கருத்து : 'இவளுடைய கண்ணெளியானது கருமை கெட்டுப் பொன்போற் பசலையும் படர்ந்ததன் பின்னர், அவன் மீண்டு வந்துதான் இவட்குப் பயன் என்னையோ' என்று கூறி வாயில் மறுத்தனள் என்பதாம்.

சொற்பொருள் : தூம்பு - உள்ளே துளையுடைமை. .சிறு தொழு மகளிர் - குற்றேவல் செய்யும் சிறு மகளிர்: இவர், தம்