பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



54

ஐங்குறுநூறு தெளிவுரை


சொற்பொருள்: இருஞ்சாய் - பஞ்சாய்க் கோரை; கருநிறத் தண்டுடைமை பற்றி 'இருஞ்சாய்' என்றனர். செருந்தி - நெட்டிக் கோரை, தண்டாங் கோரை, வாட்கோரை எனக் கூறப்படும் கோரை; இதன் தண்டு சற்றுப் பெரியது: கனம் அற்றது; ஆகவே 'நெட்டிப் புல்' எனவும் சில பகுதியினர் கூறுவர். பொருந்து மலர் - இணையாக விளங்கும் மலர்: அழகு பொருந்திய மலரும் ஆம். 'செருந்தி' என்றொரு மரமும் உள்ளது; அது நெய்தல் நிலத்து மரம். கரும்புபோல அசைந்தாடும் என்றது, அவரும் தலைவனின் உரிமைமகளிர் போலவே தம்மைக் காட்டித் திரிவர் என்றற்காம்.

உள்ளுறை : வேழம் செருந்தியோடு சேர்ந்து, காற்றிற் கரும்புபோல அசைந்தாடும் என்றது, தலைவனின் ஆதரவால் பரத்தையர் தம் தோழியரோடும் கூடியவராக, ஊர்க்கண்ணே செருக்கித் திரிகின்றனர் என்று கூறியதாம். பிரியலென் என்றவன் பிரிந்தனனாகி அவர்பாற் சென்றனன்; ஆதலின தகுதியற்ற புல்லியரான அவரும் தருககித் திரிகின்றனர் என்றதாம்.

19. கண் பனி யுகுமே !

துறை: 'பன்னாள் அவன் சேணிடைப் பிரியவும் ஆற்றயுளையாகிய நீ, சில்நாள் அவன் புறத்து ஒழுகுகின்ற இதற்கு ஆற்றாயாகின்றது என்னை?' என்ற தோழிக்கு, 'எதிர்ப்பாடு இன்றி ஓர் ஊர்க்கண்ணே உறைகையினாலே ஆற்றேனாகின்றேன்' எனத் தலைமாள் சொல்லியது. வாயிலாய்ப் புகுந்தார் கேட்டு, நெருங்காது மாறுதல் கருத்து.

[து.வி: முன்னர், அவன் வேற்றுப்புலம் போயவழி, நெடுங்காலம் அவன் பிரிந்திருந்ததனைப் பொறுத்திருந்தனை. இப்போது நேரும் சிறு பிரிவுக்குமட்டும் எதனால் ஆற்றாயாய்த் துடிக்கின்றாய்?' என்று கேட்கின்றாள் தோழி. அதற்கு தலைவி, ஒரே ஊரிலே இருந்து கொண்டும், என்பால் வராதிருக்கும் அந்தக் கொடுமையைப் பொறுக்க இயலவில்லையே என்று கூறிப் புலம்புகின்றாள்.]

எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்சினை
புணர்ந்தோர் மெய்ம்மணல் கமழும் தண்பொழில்
வேழ வெண்பூ வெள்ளுளை சீக்கும்
ஊரன் ஆகலின், கலங்கி

மாரி மலரிற் கண்பனி யுகுமே!

style="background:#F99;vertical-align:middle;text-align:center;" class="table-no"|No