பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

55


கருத்து: 'அவனை இனி யாம் ஏற்பதுதான் எதன் பொருட்டோ?' என்பதாம்.

சொற்பொருள்: சில் - சிறிய. சிறை - சிறகு. தும்பி - வண்டு வகை. சினை - தும்பியின் சினை. நூற்றிதழ்த் தாமரை - உயர்வகைத் தாமரை; இதனைச் சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்கேழ் நூற்றிதழ் அலர் (புறம். 27) என்பதாலும் காண்க. காம்பு - மூங்கில், இறை - முன்கை. நெகிழ்பு ஓடும் - தாமே நெகிழ்ந்து கழன்று ஓடாநிற்கும்.

உள்ளுறை: தாமரைப் பூவிடத்துள்ள தும்பிச்சினையை, வேழப்பூவானது மோதிச் சிதைப்பதுபோல, தலைவிமாட்டு மீண்டும் வந்தானான தலைவனைப், பரத்தையர் மீளவும் நெருங்கிப் பிரித்துத் தம்பாற் கொண்டேகுவர் என்பதாம்.

வேழம், தாமரைப் பூவிடத்துத் தும்பிச்சினையைச் சிதைக்குமாறு போல, தலைவன், தன் பொருந்தாச் செயலால், தலைவியின் இல்லறவாழ்வைச் சிதைப்பானாயின் என்பதும் ஆம்.

விளக்கம்: அறுசில் கால அஞ்சிமைத் தும்பியானது நூற்றிதழ்த் தாமரையிடத்தே தேனையுண்டு இன்புற்றதேனும், அடுத்துத் தன் கால்களால் அப்பூவின் சினைகளையும் சிதைக்கின்ற கொடுமையையும் செய்யும ஊரன் அவன். ஆதலின், அவனை இன்புறுத்திய நம் நலனையே அவனும் கொடுமை செய்து சிதைப்பானாயினான் என்பதும் ஆம்.

பாடபேதம் : 'நிறையே போல் வளை' என்பதாம். இதற்கு, 'நிறுப்ப நில்லாது அவன்பால் நெகிழ்ந்து செல்லும் என் நிறையினைப் போலவே, என் கைவளையும் நிறுப்ப நில்லாதே தானே கழன்றோடும்' என்று பொருள் கொள்க.